பக்கம்:அஞ்சலி.pdf/251

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகா 241

“நான் பாஷையில் தோய்ந்துபோனேன். வாயின் வரம்பு தோற்ற மோனத்தில் தித்தித்த சொல்லில் தோய்ந்துபோனேன்.”

“ஏகா ஏகா!!” அவனைப் பீதி பற்றிக்கொண்டது. அவள் தோளைப் பிடித்து உலுக்கினான்.

“கண் திறந்தால் ஒளி

மூடினால் இருள்

மூடியும் திறந்தும் உழன்றால் உயிர்

என நானே எனக்குப் பெயர் வைத்துக்கொண்டு செயல் வகுத்த நிலை முந்திய கர்ப்ப வெளியில் நானற்று நிறைந்திருக்கிறேன்.”

“ஏகா!”

“நான் ஏகம்.”

“My God!”

“நான் உன் தெய்வமல்ல. உன் தெய்வம், என் தெய்வம், நான், தான், எனக்கென்று அவரவர்க்கு அவரவர் தெய்வமாய், எத்தெய்வமும் அடியூன்றிய ஆகாச கோசம் நான்.”

“ஏகா, என்னென்னவோ பேசாதே. கண்ணைத் திற.”

“என்னை ஏகத்திலிருந்து பிரிக்க என் இமைகளைப் பிரி. என்னால் கண் திறக்க முடியவில்லை. நான் ஏகமான பின்பு, நானாய்த் தனிப்பட முடியவில்லை.”

அவனைப் பயங்கரம் சூழ்ந்தது. இவை இமைகள் அல்ல. இவை அடைத்த கதவுகள். உள்ளே ஏகா மாட்டிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறதோ?

அ.—16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/251&oldid=1033529" இருந்து மீள்விக்கப்பட்டது