பக்கம்:அஞ்சலி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62 லா. ச. ராமாமிருதம்

முற்றத்தில் இருள் மடிமடியாய் விழுந்துகொண்டிருந்தது, சுவர்களில் விதவிதமாய்த் தோய்ந்த கறைகள் குழைய ஆரம்பித்துவிட்டன. தூணின் உச்சி பீடத்தில் கட்டிய கூட்டில் தாய்க்குருவியும் குஞ்சுகளும் “கீச்கீச்”

ஜமதக்னி எழுந்து படத்தின்கீழ் நின்ற குத்துவிளக்கை ஏற்றினான். அமுக்கி வைத்திருந்த உயிருடன் சுடர் திரியிலிருந்து குதித்தெழுந்தது. மாஞ்சிக்கு நெஞ்சு துள்ளிற்று. நெஞ்சைத் தொட்டுக்கொண்டாள். படத்தில் கண்கள் சிமிட்டிப் பளீரிட்டன.

அவன் அசைவற்று நின்றான். ஒடும் பாம்பை நெஞ்சில் அழுத்தினாற்போல் அக்கணம் நில்லென அந்தரத்தில் நின்றது ஒரு கணம்தான். ஸ்தம்பித்த நேரம் மறுபடியும் தான் இழந்த வேகத்தைப் பன்மடங்கு பெருக்கிக்கொண்டு வெள்ளமாய் இறங்கிற்று. மாஞ்சிக்கு மூச்சுத் திணறிற்று. மறுபடியும் நினைவு வருகையில் அவன் பேசிக்கொண்டிருந்தான்,

“—ததும் எனக்காக கடலையுருண்டை பண்ணினது எனக்குத் நினைவு வந்துவிட்டது. அதிலிருந்து இன்னமும் எது எதுவோ எங்கெங்கேயோ...”

அவனுடைய விசன மூச்சு, அரவுபோல் அவள்மேல் விழுந்து சுருண்டு கழன்று கொண்டது.

“இது ரொம்ப நாளைக்கு முன்னால்; எனக்கு ஒண்ணரை வயசிருக்குமாம். அக்காவுக்கு அப்போது பதினொன்று தாண்டிப் பன்னிரண்டு. இடையில் ஏதேதோ பிறந்ததாம். ஒன்றும் தங்கவில்லை. நாங்கள்தான் மிச்சம்.

“அம்மா வீட்டுக்கு விலக்கு, வாசலிலிருந்தபடி பதம் சொல்லிக்கொடுத்து என் சகோதரி சமைத்துக்கொண்டிருந்தாள். அக்கா அப்பொழுது முதற்கொண்டே ரோம்பகெட்டிக்காரியாம். கண் பட்டது கை செய்யும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/72&oldid=1033414" இலிருந்து மீள்விக்கப்பட்டது