பக்கம்:அஞ்சலி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 63

“அன்றைக்கு என்னவோ தானே கடலையுருண்டை பிடிக்க வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள். அம்மா ‘வேண்டாண்டி’ என்று வாசலிலிருந்த வண்ணம் கத்தக் கத்தக் கும்மட்டியில் வெல்லப்பாகு வைத்துவிட்டாள். அது சரியாக வருகிறதா என்று பார்ப்பதற்காகக் கொஞ்சம் கரண்டியில் எடுத்து ஜலத்தில் நனைத்து நூல் பார்த்து விட்டு என் நாக்கில் கைப்பாகைக் கொஞ்சம் இழுத்துவிட் டாள். நான் குழந்தை அவள் அந்தப்பக்கம் பார்த்துக் கொண்டிருக்கையில் நானே சப்பையில் நகர்ந்து வந்து காயும் பாகில் கையை வைத்துவிட்டேன்.

“க்றீச்”சசென நான் போட்ட அலறலில் அக்கா கைவேலையை அப்படியே கீழே போட்டுவிட்டு ஓடிவந்து என் கையைப் பிடித்து இழுத்த வேகத்தில் இசைகேடாய் வானாய் சாய்ந்து அத்தனை பாகும் அவள் கைமேல் கொட்டிவிட்டது.”

மாஞ்சி கன்னங்களைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள்.

சமையலறையில் கோடியடுப்பில் கொள்ளிக்கட்டை சரிந்தது. தீ நாக்குகள் துள்ளி விளையாடின.

ஜமதக்னி தீக்குச்சியின் கட்டையால் விளக்குச் சுடரைத் துாண்டினான்.

“அக்காவுக்குக் கை சொஸ்தமான பிறகு கைக்கட்டை அவிழ்த்தபோது கை பார்க்கச் சகிக்கவில்லை. அதைப் பார்க்கும்போதெல்லாம்— அதுவும் அந்த முகத்தைப் பார்த்துவிட்டுக் கைமேல் கண்ணிறங்கும் ஒவ்வொரு தடவையும் எங்களுக்கு வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டும்.

எனக்கு ஒன்று என்றுமே மறக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/73&oldid=1033415" இலிருந்து மீள்விக்கப்பட்டது