பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தொகைவகை பிறழாமல் செய்தல்

தொட்ட குறை விட்ட குறை

தொட்டது முதல் விட்டது வரை

தொடுத்து மடுத்துச் செய்து முடித்தல்

தொடுபிடியாக ( - இடைவிடாமல்)ச் செய்து முடித்தல்

தொடை நயமும் நடை நயமும் உடைய நூல்

தொண்டையங் குதலைவாய் மதலை (அழகர். பித. 7-11)

தொண்டையும் மண்டையும் போம்படி சண்டையிடல்

தொத்திப் பற்றிக் கொளல்

தொந்தமோ பந்தமோ இல்லாதவன்

தொந்தியும் தொப்பையுமான ஆள்

தொல்லாணை நல்லாசிரியர் (மதுரைக் 761)

தொல்லைகளும் துயரங்களும் (நெடுஞ்செழி)

தொல்லையும் தொந்தரவும் கொடுத்தல்

தொலைச்சுத் தலை முழுகுதல்

தொலைத்துத் தலை முழுகுதல், முழுகிவிடல்

தொலைந்து ஒழிதல்

தொலையாப் பெருஞ்செல்வம் (நன்னெறி 14)

தொழுது தொழுது தோத்திரங்கள் சொல்லித்

துதித்து நிற்றல் (ச 73-11)

தொன்று தொட்டு இன்று காறும்

தொன்று தொட்டு இன்றுவரை தொடர்ந்து நிலவுவது

தொன்று போல் என்றும் நின்று நிலவும்

தோட்டம் துரவு படைத்தவன் (துரவு - கிணறு)

தோப்பு துரவு

தோலா நாவின் மேலோர் (ஆசிரியமாலை ) (தோலா -

தோல்வியடையாத)

தோலும் எலும்புமாய்ப் போய்விட்டவள்