101
தேர்த் திருவிழாக்களுக்கு கூட்டம் நிறையக் கூடும்
தேர்தொறும் அமுதம் ஊற்றிருந்தொழுகு தீஞ்சொல்
- (பாகவதபு 1-2-15)
தேர்ந்து தெளிதல்
தேர்ந்து தெளிந்து துணிக
தேவர்க்கும் மூவர்க்கும் யாவர்க்கு மேலான தெய்வம்
தேவரும் மூவரும் ஏவரும் புகழும் தேவன் (சுப்பிர.
- பித 5-9)
தேற்றமும் தெளிவும் வேண்டும்
தேற்றித் துயராற்றுதல்
தேறல் மாந்தி மகிழ் சிறந்து (புறம் 36
தேறித் தெரிந்து தெளிதல்
தேறித் தெளிதல் - மிகத்தெளிதல் (பரி 12-82)
தேறுதலும் ஆறுதலும் உறுதல்
தேன் தோய்த்தன்ன தீஞ்சொல் (பெருங்க 1-35-109)
தேன் போலத் தித்திக்கும் திருப்பாட்டு
தேன்வழியும் மழலைத் தீஞ்சொல் (தணிகைப்பு)
தேனினும் இனிய தீஞ்சொல்
தேனும் தினைமாவும்
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்திருக்
- கும் (திவ் 3527)
தேனும் பாலும் தெள்ளமுதுங் குழைத்தூட்டியது
- போல்
தேனொத்து அமிழ்தொத்த மென்தீங் கிளவி (தணி
- கைப்பு)
தையலார் மையலிலே தாழ்ந்துவிடல் (திருவா)
தைரியமும் விடா முயற்சியும் கொண்டவர்
தொகுத்துக் கூறி வகுத்துக் காட்டல்
தொகுத்தும் வகுத்தும் விரித்தும் கூறல்