பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4

 அடக்க ஒடுக்கம் இல்லாத அடங்காப்பிடாரி -(பழ)

அடக்கமும் அமைதியும் உடைய

அடக்கமே வடிவாய் அன்பே உருவாய் விளங்குதல்

அடக்கி ஒடுக்குதல்

அடக்குவாரற்ற கழுக்காணி

அடங்கி ஒடுங்கி இருத்தல்; நடத்தல்; கிடத்தல்

அடங்கி ஒடுங்கி நடுங்கிக் கிடத்தல்

அடங்கி முடங்கிக் கிடத்தல்

அடமும் பிடிமுரண்டும் உடையவள் - அப்பாத்.

அடமும் பிடிவாதமும் பிடித்தல்

அடலைமுடலை - (வீண் வார்த்தை) பேசுதல்

அடர்ந்து செழித்து வளர்ந்த

அடரடி படரடியாய்க் கிடத்தல்- குழப்பமாய்க் கிடத்தல்

அடிச்சான் பிடிச்சான் வியாபாரம் - மேல் விழுந்து செய்யுங் கொடுஞ் செய்கை

அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுது

அடித்தாலும் உதைத்தாலும் பொறுத்துக் கொளல்

அடித்துத் துவைத்தல் அடித்து நொறுக்கி அழித்தல்

அடித்துப் பிடித்துக் கொண்டோடுதல் -வேகமாய் ஓடல்

அடித்துப் புடைத்தல்

அடித்துப் புடைத்துக் கொண்டு ஓடுதல்

அடி தண்டம் பிடி தண்டமான ஆள் அடிமை; பூரண மாக வசப்பட்ட ஆள்

அடித்து நொறுக்குதல்

அடி தண்டம் பிடி தண்டம் -- பூர்ணமாக வசப்பட்ட பொருள்

அடி தண்டம் பிடி தண்டமாய் அடிமைப்படுதல்