பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121

பற்றறத் துறந்த படிவத்தோர் (பெருங்க 3-25-24)

பற்றிப் படர்ந்து செல்லுங் கொடி

பற்றுக பற்றற்றான் பற்றினை (குறள் 358)

பற்று பசை யில்லாதவன்

பற்றும் பாசமும் உடையவர்

பறித்துப் பிடுங்குதல்

பன்னிப் பலப்பல சொல்லுதல் (சத்தி கோ 26)

பாக்கிசாக்கி யில்லாமல் பணத்தைத் திருப்பிக்

கொடுத்தல்

பாங்கு பரிசனை ( - நன்னடை) அறிந்து ஒழுகுதல்

பாசம் நேசம் இல்லாத

பாசமும் நேசமும் கொண்டவர்

பாசவல்வலைப் பட்டழிந்து பதைத்து நின்ற பாதகன்

(செந் மு சந் 18-5)

பாட்டில் சுவையும் சுகமும் கைகோத்துச் செல்லுதல்

பாடலும் ஆடலும் பயின்றுள்ளவள்

பாடாய்ப் படுத்துதல்

பாடித் துதித்தல்

பாடிப் பண்ணிசைத்துப் பரமனைத் தொழுதல்

பாடிப் பணிந்து பரவிப் புகழ்தல்

பாடிப் பரவசப் படு(த்து)தல்

பாடிப் பரவிப் பணிந்து ஏத்துதல்; போற்றுதல்

பாடிப் பரவி வழிபாடு செய்தல்

பாடியாடிப் பணிந்தேத்திப் பரமனைப் பரவுதல்

பாடியாடிப் பரவசமடைதல்

பாடியவாய் தேனூறும் பாடல் (கவிமணி)

பாடுபட்டுத் தேடிப் பணஞ் சேர்த்தல்

பாடுபடும் பாட்டாளிகள்

பாண்டு பத்திரம் எழுதிக் கொடுத்தல்