பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149

வனப்பும் இளமையும் வரம்பில் கல்வியும் தனக்கு நிகர்

இல்லாத் தன்மையன் (பெருங்க 1-35-230)

வாக்காலும் மனத்தாலும் அளக்கலாகா இறைவன்

வாக்கு வயனம் தெரியாமல் பேசுதல்

வாக்கு வாதம் செய்தல்

வாட்ட சாட்டமான ஆள் ; உடம்பு

வாட்டி வதக்குதல்

வாட்டி வதக்கிப் பிழிதல்

வாட்டி வதைத்தல்

வாட்டி வதைக்கும் வெய்யில்

வாடி உலர்ந்த, தளர்ந்த, வருந்தும் மனம்

வாடி உலறிய கன்னங்கள்

வாடி வதங்கிப் போதல்

வாணிகம் செய்து வளர் பொருளீட்டுதல்

வாணாளை வீணாளாகக் கழித்தல்

வாணாளை வீணாளா வையகத்திற் போக்காமல் (சோணா

சல. வெ. காப்பு)

வாதமிட்டு வழக்காடுதல்

வாதிட்டு வழக்காடுதல்

வாதுகள் வம்புகள் ஏன்?

வாய்க்கால் வரப்பு இல்லாத நிலம்

வாய்க்கும் கைக்கும் எட்டவில்லை

வாய்ப்பும் வசதியும் வாய்ந்தோர்

வாய் திறந்தொரு வார்த்தை பேசுவீர்!

வாய் பேசாது மௌனமாயிருத்தல்

வாய்மூடி மௌனியாய் நிற்றல்

வாய்மையும் தவமுந் தூய்மையும் உடையவர் (குமர

452-38)