155
வெட்கம் மானம் ஒன்றும் இல்லாதவன்
வெட்கமும் துக்கமும் உண்டாதல் - (குகப்ரியை)
வெட்கமும் வேதனையும் அடைதல்
வெட்கித் தலைகுனிதல்
வெட்கி விறைத்துப் போதல்
வெட்ட வெளி - திறந்த வெளி
வெட்ட வெளிச்சமான விஷயம்
வெட்ட வெளிச்சம் பட்டப் பகலாய்த் தெரிகிறது
வெட்ட வெளிச்சம் பட்டப் பகலாய்ப் போச்சுது (பழ)
வெட்ட வெளிச்சமான பட்டப் பகலில்
வெட்ட வெளிப் பொட்டல் (நிலம்)
வெட்டிக்கு இறைத்து விழலுக்குத் தண்ணீர் கட்டுதல்
வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் சண்டையிடல்
வெட்டிச் சாய்த்தல்
வெட்டித் தரித்துவிடு
வெட்டித் துண்டித்தல்
வெட்டி முறித்துவிடல்
வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுதல்
வெட்டுங் குத்துமாய்க் கிடக்கின்றது
வெட்டுத் தட்டுப் பேச்சு - வெட்டியும் மடக்கியும்
- பேசும் பேச்சு
வெட்டுப்பழி குத்துப்பழி - தீராப்பகை
வெட்டுப் பழி குத்துப் பழியாக வெறுப்புக் கொண்டிருத்
- தல் (கல்கி)
வெட்டொன்று துண்டிரண்டாகப் பேசுதல்
வெடுக்கு வெடுக்கென்று பேசுதல் (கல்கி)
வெடுப்பும் கடுப்பும் காட்டாதவன்
வெண்ணிலவு தண்ணொளியை வீசிக் கொண்டிருத்தல்
வெண்பா என்னும் ஒண்பா