காடு மேடாய் அலைந்து திரிதல்
காடு மேடெல்லாஞ் சுற்றித் திரிதல் ; சுற்றியலை தல்
காடுவெட்டிக் காம்பு திரித்துப் பயிரிடல்
காண்போர் கண்களையும் கருத்தையும் கவரும் காட்சி
காணி கரைகளைப் பார்வையிடல்
காதகி கள்ளி!
காதல் கரைகடந்து பெருகுதல்
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குதல் (தே)
காதலாவது கத்திரிக்காயாவது
காதலும் கலியாணமும்
காதறை கூதறை - ஒழுக்கங் கெட்டவன்(ள்)
காதிலே கழுத்திலே ஒன்றும் இல்லாதவள்
காதுகொடுத்து உற்றுக் கேட்டல்
காமங்கலைந்து கன்றுதல் (சிந்9)
காம வெகுளி மயக்கங்களைக் கடிதல்
காமனைப்போல் கட்டழகுடையவன்
காமா சோமா (-கன்னாபின்னா) என்று கத்திக்கொண்டிருத்தல் ; பேசுதல்
காய்த்துப் பழுத்துக் கனிந்த கனி
காய்தல் உவத்தல் இன்றி ஆய்தல் (அறநெறிச் 42)
காய்ந்து கருகிப்போன பயிர்கள் ; உலர்ந்துபோன பயிர்கள்
காய்ந்து கருவாடாய்ப் போதல்
காய்ந்து தீய்ந்துபோன
கார்புரை கரிய கூந்தற் காரிகை
காரசாரமாகப் பேசுதல் ; விவாதித்தல்
காரசாரமாகவும் ஆவேசமாகவும் பேசல் (கல்கி)
காரசாரமான விவாதம்
காரண காரியம் கடந்த கடவுள்