பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அடுக்குமொழி அகராதி

அக்கக்காய் வெட்டுதல் - துண்டு துண்டாய் வெட்டு தல்

அக்கல்சுக்கலாகச் சிதறல்- அக்குச்சுக்காகச் சிதறல்

அக்கறையும் கவனமும் செலுத்துதல்

அக்கறையோடும் ஆர்வத்தோடும் செயலாற்றுதல்

அக்கிரமமாகவும் அநியாயமாகவும் செய்தல்

அக்கிரமமும் அநீதியும்

அக்கிலிப்பிக்கிலி-மனக் குழப்பம்

அக்கு அழுக்கு இல்லாத மனம்

அக்குத் தொக்கு இல்லாதவன் (அக்குத் தொக்கு - ஒட்டுப்பற்று)

அக்குமில்லை தொக்குமில்லை

அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்தல், பிரித்தல்

அகங்குழைந்து ஆற்றாது அழுதல் (சிந் 408)

அகடவிகடம் பேசுதல்

அகத்தும் புறத்தும் நிறைந்திருக்கும் ஆண்டவன்

அகந்தை அகங்காரம் இல்லாதவன்

அகந்தையும் அகம்பாவமும் உடையவன்

அகப்பற்று புறப்பற்றுக்களை அறவே ஒழித்தல்

அகமலர்ந்து அளவளாவுதல்

அகமலியுவகை ஆர்வமொடு (மலைபடு 184)

அகமும் புறமும் ஒத்திருத்தல்

அகமும் முகமும் மலர வரவேற்றல்

அகமும் முகமும் மலர்தல்