உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2


அகலாது அணுகாது தீக்காய்க (குறள் 61)

அகழ்ந்து தோண்டுதல்

அகன்று நீங்குதல்

அகாடி பிச்சாடி யில்லாதவன் - கட்டுக்கடங்காதவன்

அஃகி அகன்ற அறிவு (குறள் 175)

அங்கண்மா நிலத்து

அமுதாகிய ஆறு (நைட -7)

அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும் வெங்கதிர்ச் செல்வன் (புறம் - 59)

அங்கசங்கம் - பகட்டு; புணர்ச்சி

அங்கபங்கம் - உடம்புறுப்புக்களின் சோர்வு

அங்கம் ஆறுடை நான்மறை அந்தணர் (அ. திருப்பழ)

அங்கரங்க வைபோகங்களும் - சகல விதமான அனுபோகங்களும்

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிற்கும் ஆண்டவன்

அச்சமும் அவலமும் கொள்ளுதல்

அச்சமும் திகிலும் அடைதல்

அச்சமுந் திகிலும் அதிரடியுங் கொண்டிருத்தல் (அதிரடி - மனக்கலக்கம்)

அச்சரி புச்சரியாயிருத்தல் - தொந்தரவாயிருத்தல்; தினவெடுத்தல்

அச்சுவேறு ஆணிவேறாகப் பிரித்தல்

அசட்டுப்பிசட்டென்று நடந்து கொள்ளல்; பயப்படல்; உளறுதல் (சந்திரிகா - 33)

அசட்டும் பிசட்டுமாக எழுதிவிடல்

அசடர்களும் தூர்த்தர்களும்

அசதியும் அயர்ச்சியும்

அசதியும் அயர்வும் அடைதல்

அசதி மறதியாய் விட்டு விடல்