பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

சிக்கலும் குழப்பமும் இல்லாத நிலை

சிக்கலும் நெருக்கடியும் ஏற்படல்

சிக்கனமாகச் செட்டாக வாழ்க்கை நடத்துதல்

சிக்கச் சீரழிதல்

சிக்கித் தவித்தல்

சிக்குஞ் சிரங்குமாய் உள்ள உடம்பு

சிக்குப் பிக்காயிருக்கும் நூல்கண்டு - சிக்கலா யிருக்கும் நூல்

சிக்கும் சிணுக்குமா யிருக்கும் (நூல்)

சிங்காரச் சீமான்கள் (அண்ணா)

சிட்டை சிரட்டைகளில் நீர் ஊற்றி வைத்திருத்தல்

சிடுக்குப் பிடுக்கு - சிடுசிடுப்பு

சிடுசிடுப்பாயும் கடுகடுப்பாயும் பேசுதல்

சித்தப் பிரமை கொண்ட பித்தர்கள் (கல்கி)

சித்தன் போக்கு சிவன் போக்கு என்று அலைதல்

சித்தரும் முத்தரும் பத்தரும் வழிபடும் சிவபிரான்

சித்தியும் முத்தியும் பெறுதல்

சித்திர விசித்திர வேலைப்பாடுகள்

சிதறிச் சின்ன பின்னமாய்ப் போதல்

சிதைத்துச் சின்னபின்னமாக்கு

சிதைத்துச் சில்லபொல்ல மாக்குதல்

சிதைத்துச் சீர்குலையச் செய்

சிதைத்து நசித்துப் போகச் செய்தல்

சிதைந்து உருத்தெரியாமற் போதல் (கல்கி)

சிதைந்து ஒழிதல்

சிந்தனை பேச்சு செயல்களில் செம்மையானவர்

சிந்தனையோ கவலையோ மனத்தில் இல்லாதவர்

சிந்தாது சிதருது உணவுண்ணல்