உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

தலையளித்து ஓம்புதல் (பெருங்கதை)

தலையால் வணங்கி வாயால் வாழ்த்தி

தலையும் புரியவில்லை காலும் (வாலும்) புரியவில்லை

தவங்கல்வி ஆள்வினை (நாலடி 195)

தவம் செய்த தவம் ஆம் தையல் (கம்ப 5-14-31)

தவம் செய்யாது அவம் செய்வோர்

தவிடு பொடியாக்கல்

தவித்துத் திகைத்துத் தளர்தல்

தவியாய்த் தவித்தல்

தழங்கு வெள்ளருவி இழிந்தொளிர் குன்றம் (சோண

சைல 18)

தழலதுகண்ட மெழுகது போலத் தொழுது உளம் உருகி

அழுது உடல்கம்பித்து ஆடியும் அலறியும் பாடியும்
பரவியும் நிற்றல் (திருவா 4-60)

தழங்கு தழங்கென மிருதங்கம் முழங்கல் (கப்பற் 13)

தழுவி அணைத்துக்கொள்ளல்

தழைகளாலும் குழைகளாலும் அலங்கரிக்கப்பட்ட பந்தல்

தழைத்து இனிது ஓங்குக

தழைத்துச் செழித்து வளரும் மரம்

தழைத்து விருத்தியாகும் குடி

தள்ளாட்டம் தடுமாற்றம் இல்லாத

தள்ளாடித் தத்தளித்து நடந்து வரல்

தள்ளாடித் தடுமாறி நடத்தல்

தள்ளிப் புறம் போக்குதல்

தள்ளி நிராகரித்தல்

தள்ளுப்புள்ளு - இழுபறி

தள்ளுமுள்ளு - இழுபறி