பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாடிய புலவன் பாலைக் கெளதமனார்

சங்ககாலப் புலவர் பெருமக்களுள், பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாடிய புலவர், பாலைக் கெளதமனார் ஒருவரே. தம் பாட்டுடைத் தலைவனாகப் பாலைக் கெளதமனாரால் பாராட்டப் பெற்றேனும், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் ஒருவனே. பாலைக் கெளதமனார், அந்தணர் குலத்தவராவர்.'ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற இவ் ஆ று தொ ழி ல் அல்லது வேறு செய்தொழில் அறியார்; என்றும் அறவுணர்வே உடையவர்; அறமே மொழிபவர்; அறவினையே ஆற்றுபவர்; எவ்வுயிர் மாட்டும் செந்தண்மை பூண்டொழுகும் சீலம் உடையார்; அவரைப் பணிந்து, அவர்காட்டும் வழிநின்று அரசாள்வார், உலகனைத்தையும் வென்று, ஒரு குடைக்கீழ்க் கொண்டு ஆள்வர்; புலவர்தம் பாராட்டைப் பெறுவர்; புகழ் அவரைத் தானே தேடிவந்து அடையும்” எனத், தாம்பிறந்த குடிப் பெருமையைப் புகழ்ந்துபாடும் பாலைக் கெளதமனார் பண்பு. குடிசெய்வல் என்னும் ஒவ்வொருவர்க்கும் நல்ல வழிகாட்டியாம்.

'ஓதல்,வேட்டல்,அவைபிறர்ச் செய்தல், ஈதல்,ஏற்றல் என்று,ஆறு புரிந்து ஒழுகும் அறம்புரிஅந்தணர்வழிமொழிந்து ஒழுகி ஞாலம் நின்வழி ஒழுகப் பாடல்சான்று நாடுடன் விளங்கும் நாடா நல்லிசைத் திருந்திய இயன்மொழித் திருந்து இழை கணவ!"

- -பதிற்றுப்பத்து :24:6-11.

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/11&oldid=1501623" இலிருந்து மீள்விக்கப்பட்டது