பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசில் பெறுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, அதுபெறுவான் வேண்டிப் பொருள்படைத்தார் உளம்மகிழும் உரைகளையே தேர்ந்தெடுத்துத் திரிவது, பண்டைத்தமிழ்ப் புலவர்க்குப் பண்பன்று. நாடு வாழ வேண்டும்; அந்நாடாளும் மன்னவன் நல்லவன் ஆதல் வேண்டும் என்பதே அவர் குறிக்கோளாம். அதனல், நாடாள்வார்பால் நற்பண் பின்மையினைக் காணுந்தோறும், அவர்நா, அறவுரை வழங்கத் தலைபட்டுவிடும். தாம் கூறும் அவ்வுறவுரை, கே. ட் கு ம் அரசர்க்குக் கொடுமையுடையவாத் தோன்ற, அதனுல் அவர், தம்மீது சினங்கொள்ள, அதனால் தாம்கருதி வந்த பரிசிலுக்கு மாருகப், பெருந்துன்பமே கிடைப்பதாயினும், அது குறித்துக்கவலார்; அந்நிலையிலும் அஞ்சாது அறம் உரைத்து நிற்பர். இப்பண்புடைமையில், பாலைக்கெளதமனர், ஒருசிறிதும் குறையுடையார் அல்லர்; அதனல், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் குறித்து, அவர் பாடிய பாக்கள் பத்தினும், அவன்புகழ்பாடும் பகுதியைக் காட்டிலும், அவனுக்கு அறவுரை வழங்கிய பகுதியே அதிகமாம்.

தன் பேராண்மையைப் பாரெலாம்போற்றவேண்டும் என்ற போர்வெறியால் பீடிக்கப்பெற்று, பல்யானைச்செல்கெழுகுட்டுவன், LJ6) &S நாடுகளைப் பாழ்செய்து அலைவதைக் கண்ணுற்ற புலவர், அவன் போர்வெறியைப் போக்கவிரும்பினர், விரும்பியவர், அவன், தம் உரைகேட்டு மதிக்கும் மனநிலை பெறும் வாய்ப்பினை எதிர்நோக்கியிருந்தார். தான்் பெற்ற வெற்றிகளைப் புலவர், தம் பாவிடை வைத்துப்பாராட்டப், அப்பாராட்டுகேட்டு, அவர்பால் பேரன்புஉடையைைன் மன்னவன்; அந்நிலையில் அவர் கூறும் அனைத்தையும் ஏற்கும் அன்புள்ளம் அவனுக்கு உண்டாகி. யிருந்தது. அஃதறிந்தார் புலவர். அவ்வளவே, தாம் கூறக். கருதியதைக் கூறத் தொடங்கிவிட்டார். வேந்தே! உன்னைக்

2

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/12&oldid=1293631" இலிருந்து மீள்விக்கப்பட்டது