பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதுமொழியையும் பொய்ப்படுத்தும் வகையில் விளைந்து முற்றுவதால், கரும்பை வெட்டிச் சாறு பிழிந்து வெல்லம் ஆக்கும் தொழிலும், காலங்கடந்த நிலையிலும் ஒழியாது நிகழ்ந்து கொண்டேயிருக்கும். பழையது போக்கிப் புதியது பதிப்பான்வேண்டி, கரும்பரிந்த தாள்களைத் தீயிட்டு அவிப்பதன் முன்னர், அவ்வரிகால்களில் மலர்ந்து மணம் நாறும் பல்வகைப் பூக்களையும் பறித்துக் கொண்டாடும், மகளிரின் மலர்கொய் விழாவும், காலம் அல்லாக்காலத்திலும் நடைபெறும். கரைகளில், தேன்படுமலர்களால் நிறைந்து மாண்புற்று நிற்கும் மருதம் முதலாம் பல்வேறு மரங்களையும் வேரோடு வீழ்த்தி விட்டு, வெண்ணிற துரைகள் அலைபாயச் செக்கசெவேலென வரும்புது வெள்ளம், மதகுகளையும், மடை கரையும், கரைகளையும், கல்லணைகளையும் அழித்துவிட்டு எங்கும் பரந்து பெருகிற்றுக. அதன் போக்கைப் பண்டேபோல ஒழுங்குபடுத்தும் ஊக்கமும் உாமும் உடையராய் ஊரே ஒன்று திரண்டு வந்து, வைக்கோற்புரிகள் சுற்றிக் கட்டிய பெரிய பெரிய மணற்சரிசைகளை வெள்ளத்திற்கு அணையாக்கிட, அவ்வெள்ளம் அக்கரிசைகளையும் கரைத்துவிட்டுப் பெருக்கெடுத்துப்பாய, கரிசைகளால் ஆகாது என்பதறிந்து, கல்லும் இட்டிகையும் பெய்து அரும்பாடுபட்டு அழிக்கலாகா அரண் அமைத்து, ஆற்று வெள்ளத்தை அணைக்குள் தேக்கிவிட்ட வெற்றிக்களிப்பால், ஆரவாரப் பெருமகிழ்ச்சி கொள்ளும் சிற்றுரர் மக்கள், தம்மூர்க்கு அணித்தாக உள்ள பேரூர்களில், விழாக்குறித்து எழும் முரசொலிகேட்டு விரைந்து சென்று விழாக்கண்டு களித்து வீடு அ ட்ைட வ ர், வேந்தர்க்கும் வேளிர்க்கும் உரிய, வயல்வளம் சான்ற மருதநில மண்ணின் மாண்பு அத்தகைத்து.

தின வளர்த்து உண்ணும் உழவர். வரகுவைக்கோல் வேய்ந்த சின்னஞ்சிறு குடிச்ைகளில் வாழும் செல்வச் சிறுமை

104

104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/114&oldid=1293753" இலிருந்து மீள்விக்கப்பட்டது