பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடமாகவும் பயன்படும் கானற்சோலைகளைச் சுற்றி, வேலியாக இடப்பட்ட மணல் மேட்டில் முளைத்துக் கடல் நோக்கிப் படர்ந்திருக்கும் அடும்பங்கொடிகளை அலைத்து அழிப்பதுபோல், கரை நோக்கிப் பாயும் திரைகள் கொண்டு வந்து ஒதுக்கிய சங்குகள், இடம் மாறிய இடர்பாட்டினை எண்ணி ஓவெனும் ஒலி எழுப்பி, முரல, அது கேட்டு ஆங்கு அடையும் மக்கள், அச்சங்குகளோடு அலைகொணர்ந்து குவிக்கும் வெண்முத்துச் சிப்பிகளையும், செம்பவளக் கொடிகளையும் வாரிச்சென்று பயன்கொள்வர். வேந்தர்க்கும் வேளிர்க்கும் உரிய, கடற்கரை நாட்டின் கவின் அத்தகைத்து.

காந்தள் மலர்களால் ஆன கண்ணி தலையில் கிடந்து மணக்க, குறித்த உயிர்களைத் தப்பாது கொல்லவல்லவில், கையில் நிமிர்ந்து நிற்க, மலையையும் காட்டையும் ஒட்டினுற். போல் உள்ள பாலைக்காட்டிற்குள் புகும் வேட்டுவர், காட்டு ஆமாவின் கூரிய கொம்புகளைக் கண்டோ, வேழங்களின் மதம் பட்ட நிலைகண்டோ சிறிதும் அஞ்சாது, அவற்றை எதிர்த்து வேட்டையாடி வீழ்த்தி, காட்டுப்பசுவின் கறியையும் வேழத்தின் வெண்கோடுகளையும் மட்டுமே கொண்டு, பேரூர்க் கடைவீதிகளில் நுழைந்து, ஆங்குத் தொழில் புரியும் வணிகர், அவற்றிற்கு வி. லை யாக ப் பொற்கட்டிகளையே தரக்காத்திருக்கவும், பொன்னைப் பொருளென மதியா மனத், திட்பம் உடைமையால், அவற்றைப் பொன்னுக்கு விற்காது. வடித்தெடுத்த புதுக்கள்ளிற்கு விற்றுவிட்டுத் தம் வாழிடம் மீள்வர்வேந்தர்க்கும் வேளிர்க்கும் உரிய பாலை நிலத்தின், பண்பும் பெருமையும் அன் ை.

நிலவளமும் நீர்வளமும் குறைவறப் பொருந்தியிருந்தமையால், நஞ்செய்களில் க ரு ம் பு, காலம் அல்லாக்காலத்திலும், அதாவது, பருவத்தே பயிர் செய் என்ற

103

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/113&oldid=1293752" இலிருந்து மீள்விக்கப்பட்டது