பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அள்ளல் பட்டுத் துள்ளுபு துரப்ப

நல்லெருது முயலும் அளறுபோகு விழுமத்து

சாகாட்டாளர் கம்பலை" .

-பதிற்றுப்பத்து 27 :9-14.

உலகில் எண்ணற்ற நாடுகள் உள்ளன என்றலும், அவை ஒவ்வொன்றும், காடு, மலை, கடல், வயல் என்ற நில வகையுள் ஒவ்வொன்றையே உடையவாக இருக்கும்; இந் நால்வேறு நிலவகைகளையும் ஒருசேரப் பெற்ற நாடு, அவற்றுள் ஒன்றுகூட இராது. ஆனால் தமிழகம், அந்நில வகை அனைத்தையும், தன்னகத்தேகொண்ட தன்னேரில்லாத் தனிப்புகழ் உடையதாகும். நிலம் இயல்பாகவே நான்கு வகையுடையதாகவே, அந்நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளும், தொழில் முறைகளும் அதற்கேற்ப வேறுபட்ட இயல்புடையவாயின; தமிழகத்தின் இவ்வியற்கை அமைப்பு முறையினை ஒரேபாட்டில் வைத்துக் காட்டும் பெருமையும், பதிற்றுப்பத்திற்கே உரித்து.

கடலும், கடல் சார்ந்த நிலமும் ஆகிய, நெய்தல் நிலத்தில், புலிநகக் கொன்றை மரங்களின் மலர்கள் உதிர்ந்து படிந்து கிடக்கும் மணல்மேடு, ஒருபால் காட்சி அளிக்கும்; அத்தகு மணல்மேடுகள் நாற்புறக்கரைகளாக, நடுவே உள்ள உப்பு நீர்க்கழியில், பச்சைப்பசேலென்ற இலைகள் நிறைந்த நெய்தல் கொடிகள் படர்ந்துதோன்றும் காட்சி, நீலமணியாற் பண்ணிய பெரியகலம் போலத் தோன்றும்; அக்கழிகளில் உள்ள மீனைக் கவர்ந்துண்ணும் நீர்ப்பறவைகள், கானற் சோலையிடத்துப், புன்னைமரங்களில் சென்றுஉறங்கும், காணக் களிப்பூட்டும் அக்கானற்சோலை மணல்மேடுகளில் வீற்றிருக்கும் மக்களின் காதுகளில், அடும்பங்கொடியீர்க்கும் கடல் அலைகள் கொண்டுவந்து கரைசேர்த்த, சங்குப்பூச்சிகள் எழுப்பும்

22

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/32&oldid=1501767" இலிருந்து மீள்விக்கப்பட்டது