பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மதகுகளிடையே

நீர் நிலைகளின் மதகுகளிடையே, செறித்து வைத்திருக்கும் கதவுகளின், ஊடே நீர்ககிந்து வரும் கசிகால்களில் நெய்தல் மலர்கள் நிரைநிரையாக மலர்ந்து கிடக்கும், நீர்வளம்மிக்க நஞ்செய் நாட்டு ஆடவர்கள், தாம் ஓட்டிச்செல்லும் வண்டிகளின் வலிமைமிக்க உருளைகள், சேற்றில் சட்டென இறங்கி அழுந்திவிடக் கண்டதும், வண்டிகளை ஈர்த்துச் செல்லும் தம் நல்லெருதுகள், அவ்வாழ்ச்சியைத் தம்முயற்சியால் போக்குவான்வேண்டி, மண்டியிட்டு ஈர்ப்ப, அவற்றிற்கு ஊக்கமும் உரமும் ஊட்டுவான்வேண்டி, உரத்துக் கு ர லெ டு த் து உறுதுணைபுரிவர்.

பண்டைக்காலப் பாவையர்பாலும், அக்கால ஆடவர் பாலும் அமைந்து கிடந்த இப்பெரும்பெரும் பண்புகளைப் பாராட்டும் முகத்தான், பண்டைத் தமிழகத்தின் பண்புநலத்தைப் பாரோர்அறியப் பண்ணியபெருமை அப்புலவர் பெருமக்களுக்கே உரித்து,

'தொடர்ந்த குவளைத் தூநெறி அடைச்சி அலர்ந்த ஆம்பல் அகமடி வையர் கரியல் அம்சென்னிப் பூஞ்செய் கண்ணி அரியல் ஆர்கையர் இனிது கூடு இயவர் துறைநணி மருதம் ஏறித் தெறுமார் எல்வளை மகளிர் தெள்விளி இசைப்பின்

பழனக் காவில் பசுமயில் ஆலும்”.

-பதிற்றுப்பத்து 27:2-8

'பொய்கை வாயில் புனல்பொரு புதவின் நெய்தல் மரபின் நிரைகட் செறுவின்

வல்வாய் உருளி கதும் என மண்ட

21

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/31&oldid=1501622" இலிருந்து மீள்விக்கப்பட்டது