பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்ப்பூக்கள் அனைத்தையும் ஒருசேரத்தொடுக்கும் கண்ணி சூடிக் களிக்கும் இயல்புடையார் என்ற வரலாற்றுண்மைகளைப் பண்டே அறிந்திருந்த புலவர், அவர்களையெல்லாம் வென்று அடக்கி, அடிபணியப்பண்ணி விட்டான், பல்யான செல்கெழு குட்டுவன் என்பதறிந்து, அவன் வீரத்தை எண்ணி வியந்து நிற்கும் நிலையில், ஆங்கிருந்த ஒரு வீரன், 'புலவரே! அது மட்டுமன்று; நீவிர் அயிரை என்ற பெயரைக் கேட்டுளிரோ? அயிரை என்றதும், வெள்ளத்தை எதிர்த்து ஏறும் இயல்புடையதும், சேய்மைக்கண் இருந்தவழியும் கண்டுகொண்டு, கொத்திச் செல்லவல்ல கொக்கின் குத்துக்கு, அஞ்சுவதுமாகிய அயிரைமீன் என்று எண்ணிவிடாதீர்கள்; பல்வேறு பயன்களை யும் தரவல்ல நெடியமுடிகளைக் கொண்ட, அயிரை எனும் பெயர் பூண்டதொருமலேயுண்டே அறிவிரோ? அம்மலை உரிமையும் எம்மன்னனதே! ’ என்று கூறினன். அது கேட்டு அவன் ஆட்சிப்பரப்பும் பெருமையும் அறிந்து, இறும்பூது கொண்டவாறே அரசனை நோக்கிய புலவர், அவ்வரசளுேடு அரியணையில் அ ம ர் ந் தி ரு க் கு ம் அரசமாதேவியைக் கண்ணுற்ருர்.

கணவன் போர் முதலாம் கடமை மேற்கொண்டு சென்ற காலை, கணவன் இல்லாதபோது தண்ணிரில் மூழ்கி, கோலம் கொள்ளுதல் கூடாது என்ற உ ண ர் வா ல் , மண்ணுத போதும் நறுமணமே நாறும் நல்லியல்புடையதும், கற்பு நெறிகாட்ட கார்காலத்துமலரும் முல்லை மணம் மணக்கும் மாண்புடையதுமான, கருத்து நீண்ட கூந்தலும், தனக்கு இயல்புடைய இடமான குளத்தில் படர்ந்திருக்கும் கொடியில் இருந்து, அறுபட்டுவந்து ஈண்டுஅடைந்து, இரவில் கூம்பும் தன் இயல்பிற்குமாருக, இரவிலும் மலர்ந்தே கிடக்கும் மாண்புடையதாகிய தாமரை மலரோ என்று எண்ணி, மருடத்தக்க மலர்ந்த முகம், அம்முகத்தில் ஒளிவீசும் அருள் ததும்பும்

32

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/42&oldid=1293668" இலிருந்து மீள்விக்கப்பட்டது