பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருகருவிழிகள், காந்தட்கொடிகள் மலர்ந்து கிடக்கும் கானற்றங்கரைகளில் வனப்புற வளர்ந்து நிற்கும், மூங்கிலே போலும் பருத்த தோள்கள் ஆகிய உருவ நலங்களோடு, அழகின் திருவுருவாய், மங்கலமங்கையாய் வீற்றிருக்கும் அவளைக் கண்டு, மன்னவன் மனையறமும், அவன் அரசியல் நலமேபோல், மாண்புடைத்தாதல் கண்டு மட்டிலா மகிழ்ச்சி கொண்டார்.

'மன்னவன் மனையறம், மங்காது பொங்குக' என வாழ்த்த விரும்பிற்று அவர் உள்ளம். மன்னனுக்கு அப்பெருவாழ்வு வாய்க்கவேண்டுமேல், அது, அவன் நாட்டில் மழைவளம் குறையாது. மக்கள், பசியும் பிணியும், பகையும் அற்ற வழியே உண்டாகும் என்பதை உணர்ந் திருந்தமையால், அவர் வாய், 'அவன் நாட்டில், மழை பொய்யாப் பெருவளமும், பசி அறியாப் பெருவாழ்வும் ஊழி ஊழிகாலம் உண்டாகும் வகையில், மன்னவன், மாதேவியோடு வாழ்க பல்லுழி' என வாழ்த்திற்று,

விருந்தும் ஒரு வேள்வியே என்பர் வள்ளுவப்பெருந்தகையார்; ' இனத்துணைத்து என்பதொன்றில்லை; விருந்தின் துனைத்துணை வேள்விப்பயன்’ என்பது காண்க. பொய்யில் புலவன் கூறிய அப்பொருளுரையைப், பொன்னே போல் போற்றும்வகையில், வி ரு ந் தி னர் க் கு ப் படைக்கப்படும் உணவில், வேள்வித்தியில் கொட்டுவதுபோல் பெருகக் கொட்டும் நெய்யை, " அ டு .ெ ந. ய் ஆ வு தி ' என்று பெயரிட்டு அழைத்த பெருமையால், இப்பாட்டிற்கும் அதுவே பெயராய் அமைந்துவிட்டது.

21. 'சொல்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று

ஐந்துடன் போற்றி, அவை துணையாக,

-3- 33

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/43&oldid=1293670" இலிருந்து மீள்விக்கப்பட்டது