பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரரும், வில் வீரரும், வேல் வீரருமாகிய வீரர் கூட்டம் புறநகர் எல்லையை அணுகி விட்டதை அறிந்ததுமே, அப்பேரூர் மக்களெல்லாம் அஞ்சி அகன்று விட்டனராக, மக்கள் வழக்காறு அற்றுப்போன அ ப் பே ரூ ர் மன்றங்களைக் கழுதையேர் கொண்டு உழுது, (வெள்ளைவாகும் கொள்ளும் விதைத்துப் பாழ் செய்து விட்டது, அப்பெரும்படை.

பகைவர்க்குரிய நாட்டையும் நகரத்தையும் இவ்வாறு பாழாக்கிய பின்னர், அந்நாற்படை, அந்நாட்டின் அகத்தே அமைந்திருந்த அரணை வளைத்துக் கொண்டது. நன்செயும் புன்செயுமாகிய நானில வளங்கள் நலிவுற்றன; நகரங்கள் நிலைகுலைந்தன; மக்கள் நாட்டையும் வீட்டையும் மறந்து வெளியேறி விட்டனர் என அடுத்தடுத்து வந்த செய்திகளைக் கேட்டுக் கேட்டுக் கலங்கிக் கையொடிந்து போன அந்நாட்டுக் காவலனும், அந் நாட் டு மக்களேபோல், அரணைவிட்டு வெளியேறி ஓடிவிடவே, அரண் வாயிற் கதவுகளை அடைத்துக் காக்கும் கருவியாம், தாழ்ப்பாள், இடப்படாமல் வந்தே விடப் பட்டது. கடுங்காற்று வீசுங்கால் பற்றி எரியும் காட்டுத் தீயால் இயல்பாகவே அழிவுற்றுக் கிடக்கும் அந்நாட்டுக் காடுகளையும், காட்டுக் கோழியும் பிற காட்டின உயிர்களும் களித்து உலாவும், காட்டு வழிகளையும் வெட்டியும் வீழ்த்தியும், தீயிட்டுப் பொசுக்கியும், அந்நாற்படை மேலும் அழிவுக்குள்ளாக்கி விடவே, அவை, கால்கடுக்கக் கடந்து செல்லும் வறியோரையும், வழிமடக்கிக் கொன்றுயிர் போக்கிவிட்டு, அவர் கொண்டு செல்லும் சிறு கைப்பொருளைக் கொள்ளை யிட்டு வயிறு வளர்க்கும் கொடியோர்களின் வாழிடங்களாக மாறிவிட்டன. -

இக்காட்சிகளையெல்லாம். நேரில் கண்டவராதலின், புலவர், தாம் க ண் ட அக்காட்சிகளை அப்படியே படம்

71

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/81&oldid=1293712" இலிருந்து மீள்விக்கப்பட்டது