பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாக்கப்படும் கதவுகளின் கசிகால்களில் பூக்கும். நெய்தல் மரபின் நிரைகள் செறுவின் = நெய்தல் மலர்களில் தேன் உண்ணும் மரபின உடையவாய வண்டுக் கூட்டம் வந்து மொய்க்கும் வயல்களில் தொழில் புரியும். வல்லாய் உருளி = வண்டியின் உரம் மிக்க உள்வாய் கொண்ட உருளைகள். அள்ளல்பட்டு கதுமெனமண்ட=சேற்றில் இறங்கிச் சட்டென ஆழ்ந்து விட்டனவாக நல்லெருது முயலும், அளறு போகுவிழுமத்து = வண்டியில் பூட்டிய வலிய எருதுகள் கரையேற முயலும், அச்சேற்றினைக் கடந்தேறலாகும் .ெ த ழி ல் தளர்ச்சியின் போது. சாகாட்டாளர் = வண்டியோட்டிகள். துள்ளுபுதுரப்ப = துள்ளி உரப்பி எருதுகளுக்கு உரமும் ஊக்கமும் ஊட்டுவான் வேண்டி எழுப்பும். கம்பலை அல்லது = ஆரவாரப் பேரொலி அல்லது. பூசல் அறியா நன்னட்டு = பேர்ப்பூசல் அழியா ந ன் ைம யு ைட யு து மா கி ய அந்நாட்டின், யாணர் அரு அக்காமருகவின் = புதுவருவாய் குறையாத, கண்டார்விரும் பே ர ழ கு . நீ சிவந்தனை நோக்கலின்=நீ சினந்து பார்த்துவிட்டமையால். சிதைந்தது மன்ற = உறுதியாகச் சிதைந்து விட்டது காண்.

மருத நிலத்து வயல்களில் வளர்ந்திருக்கும். நெல் மணிகளை மயில் கூட்டம் கலந்துண்ண முனைவதும், அவற்றை மகளிர் கூட்டம் ஒட்ட முனைவதும் அம்மயில்கள், மகளிர் ஒட்டவும். ஒடி விடுவதற்கு மாருக, அவ்வயல் வரம்புகளில் வானளாவ வளர்ந்து நிற்கும் மருதமரத்துக்கிளைகளில் சென்று தங்குவதுமாகிய. இனிய காட் சி களே இலக்கிய நயம் சொட்டப் பிற புலவர்களும் பாடியுள்ளனர். 'செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை, செறிவளை மகளிர் ஒப்பலின் பறந்தெழுந்து துணை நணி மருதத்து இறுக்கும் மூதூர்' (புறம்: 344: 1-3) என்ற பாடலைக் காண்க.

87

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/97&oldid=1293733" இலிருந்து மீள்விக்கப்பட்டது