பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7. கடல் தந்தி

பயன்கள்

உலகைச் சுருங்க வைத்த கருவிகளில் கடல் தந்தியும் ஒன்று. உலகில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை மணிக் கணக்கில் நிமிடக் கணக்கில் செய்தித் தாள்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. இது கடல் தந்தியின் மூலம் விரைவாக இயலுகிறது.

உலகச் செய்திகளைத் தெரிவிப்பது மட்டும் கடல் தந்தியின் வேலை அல்ல. மற்றும் சில வேலைகளும் அதற்குண்டு. வாணிபம் அல்லது தொழில் அனைத்துலக அளவில் தந்தியினால் தான் நடைபெறுகிறது. அஞ்சல் மூலமாக வாரக் கணக்கில் முடியும் தொழில் நடப்பை மணிக் கணக்கில் தந்தியினால் முடித்து விடலாம்.

கடல் தந்தி என்பது கடல் நீருக்குக்கீழ் நடை பெறும் தொலை வரைவு முறை (underwater telegraph system) ஆகும். சொந்த அலுவல்கள், பயணச் செய்திகள் முதலியவற்றைத் தந்தியின் வாயிலாக அனுப்பலாம். இதற்கென்று தனிக் குறித் தொகுதி (code) உள்ளது. இதன் மூலம் குறைந்த செலவில் செய்திகளை அனுப்பலாம். சாதாரணத் தந்தியைவிட இதில் செலவு கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

பொதுவாகத் தந்தியின் மூலம் சொற்களைத் தெரிவிக்கிறோம். ஆனால், கடல் தந்தியில் சொற்