பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

 களைத் தெரிவித்தால், சாதாரணத் தந்தியை விடச் செலவு ஐந்து மடங்கு அதிகமாகும். தொலை வரைவு முகவரி இருப்பதுபோல், கடல் தந்தி முகவரியும் உண்டு.

அமைப்பு

சாதாரணத் தந்திக் கம்பிபோல் கடல் தந்திக் கம்பிகள் இரா. அவை தடித்திருக்கும். அவற்றின் உட்பகுதி செம்பால் ஆனது, செம்பிற்குமேல் பல உறைகள் இருக்கும்.

ஆழ்நீரில் இடப்படும் தந்திகளின் குறுக்களவு ஒரு அங்குலம் இருக்கும். ஆழமில்லாத நீர்களில் போடப்படும் தந்திகள் இதைவிட இன்னும் தடித்திருக்கும். கரை முனையில் உள்ள தந்திகளின் குறுக்களவு மூன்று அங்குலத்திற்கு மேல் இருக்கும்.

தந்திகளை இடல்

கடல் தந்திகளைப் போடுவதற்கென்றே தனிப் கப்பல்கள் உள்ளன. பொதுவாகக் கம்பிகளைப் போடுவதற்கு இரு கப்பல்கள் பயன்படும். கம்பிகள் கடலின் அடியில் படியுமாறு போடப்படும். அவற்றில் ஏற்படும் குறைகளை உடனுக்குடன் கண்டறிந்து. நீக்க, பல முறைகள் உள்ளன.

உலகின் கடல் தந்திகள்

இன்று 500-க்கு மேற்பட்ட கடல் தந்திகள் பல கடல்களிலும் கால்வாய்களிலும் போடப்பட்