பக்கம்:அணியும் மணியும்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முகவுரை

தமிழ் இலக்கியம் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையும் வாய்ந்தது; தொட்டனைத் தூறும் மணற்கேணி போலக் கற்குந்தோறும் புதிய புதிய கருத்தும் அழகும் காட்டிக் கற்போர் உள்ளத்தை அள்ளும் பெருமை சான்றது.

அன்பர் திரு. ரா. சீனிவாசன் அவர்கள் எழுதியுள்ள 'அணியும் மணியும்' என்னும் இந்நூல் தமிழ் இலக்கியத்தின் பரப்பையும் சிறப்பையும் இனிது எடுத்துக் காட்டுகின்றது.

சங்க காலம் முதல் பாரதியார் காலம் வரையுள்ள பெரும் புலவர்களின் இலக்கியப் படைப்புக்களிற் கண்ட நயங்களைத் தெள்ளத் தெளிய விளக்குகின்றார் இந்நூலாசிரியர். கலைபயில் தெளிவும், கட்டுரை வன்மையும் வாய்ந்த தமிழ்ப் பேராசிரியர் இயற்றிய இந்நூல் தமிழ் பயிலும் மாணவர்க்கு ஒர் இலக்கிய நல் விருந்தாகும் என்று நம்புகின்றேன்.


ரா.பி. சேதுப்பிள்ளை