பக்கம்:அணியும் மணியும்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


92 கூறாமலில்லை. சிலம்பின் அடியாகப் பிறந்த சிலப்பதிகாரம் சில அடிப்படையான உண்மைகளை உணர்த்துகின்றது. இதன் ஆசிரியரான இளங்கோவடிகள் தம் வாழ்க்கை அனுபவத்தில் கண்டது ஆகிய மூன்று பேருண்மைகளை அடிப்படையாக வைத்துத் தம் சிலப்பதிகாரக் கதையை அமைத்துள்ளார். அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்றாவது உம், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பது உம் சிலப்பதிகாரம் உணர்த்தும் உண்மைகளாகும். இதைப் போலவே மணிமேகலை என்ற நூலும், பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்; பிறவார் உறுவது பெரும்பேரின்பம்; பற்றின் வருவது முன்னது; பின்னது அற்றோர் உறுவது அறிக என்ற உண்மையை ஆங்காங்கு உணர்த்திச் செல்கின்றது. இவ்வாறு பெருங்காவியங்கள் சில உண்மைகளை எடுத்துக் கூறுவதை நோக்கமாகக் கொண்டு விளங்குவதைப் போலவே புறநானூறு முதலிய தனிப்பாடல்களும் பல உண்மை களை எடுத்துக் கூறுகின்றன. இவை காட்டும் பொருள் பொதிந்த மொழிகள் வாழ்க்கையின் அனுபவமுதிர்ச்சியால் வெளிப்படு வனவாகவும், உலகவியல்பை எடுத்துக் காட்டுவனவாகவும் வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாகவும் அமைந்துள்ளன. இவை ஒவ்வொரு புலவரின் வாழ்க்கையிலும் அவர் தம் சொந்த அனுபவமாகவும், அவர் தம் வாழ்வில் கண்ட பேருண்மைகளாகவும் அமைந்து, அவை உலகத்துக்குச் சொல்லும் நற்செய்திகளாக அமைகின்றன.வாழ்வில் பல்வேறு துறைகளைப் பற்றிப் பல்வேறு புலவர்கள் கொண்ட முடிவுகளை