உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7


காரணமாக வெளிநாடு சென்ற காரணத்தால் கலந்து கொள்ள இயலவில்லை. 44 தலைப்புகளில் நம்முடைய கழக மாமணிகள், முன்னணியினர், ஆற்றல்மிகு பேச்சாளர்கள் பேசியிருக்கிறார்கள். கழகத்தினுடைய கலைஞர்கள் 5 பேர் சிறப்புரையாற்றியிருக்கிறார்கள். காலையிலே பேசிய தம்பி நெப்போலியனுடைய பேச்சைப் பற்றி, மாலையிலே சரத்குமார் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தார். இவர்களுக்கெல்லாம் இயக்கத்திலே முந்தியவர் தம்பி சந்திரசேகர். அதற்குப் பிறகு இயக்கத்திலே இணைந்த சிரிப்பு நடிகர் குமரிமுத்து – இவர்கள் அனைவரும் ஆற்றிய உரைகள் - ஏதோ நடிகர்கள் ஆற்றிய உரைகள் என்று இல்லாமல், இயக்கத்திலே பண்பட்டவர்கள், இயக்கக் கொள்கைகளை புரிந்துகொண்டவர்கள் என்ற நிலையிலே அந்த உரைகள் எல்லாம் அமைந்தன.

    மாநாட்டுத் தலைவரை வழிமொழிந்து ஆறு பேர் பேசியிருக்கிறார்கள். அந்த ஆறு பேருடைய பேச்சும், மாநாட்டுத் தலைவர் தம்பி ஸ்டாலினுடைய பேச்சுக்கு ஊக்கமாக அமைந்தது என்று நான் சொல்வேன். அந்த ஆறு பேரும் ஆற்றிய உரைதான், ஸ்டாலினுடைய பேச்சு சிறப்பாக இருந்தது என்று பத்திரிகைகளெல்லாம் எழுதுவதற்கு காரணமாக அமைந்தது.
    தந்தைக்கு நேராகவே மகனைப் பாராட்டினார்கள் என்று நான் கருதமாட்டேன். தலைவனுக்கு நேராக ஒரு தொண்டனைப் பாராட்டினார்கள் என்று நான் கருதிக் கொள்கிறேன்.
    நான் அந்தத் தொண்டன் தம்பி ஸ்டாலினுக்கு சொல்லிக்கொள்வேன். நான் எனது 26வது வயதிலே ஒரு