உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8

மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் வாய்ப்புப் பெற்றேன். நான் பிறந்த ஆண்டு 1924. கோவில்பட்டியில் 1950-ல் நடைபெற்ற திருநெல்வேலி மாவட்ட மாநாட்டிற்கு தலைமை வகிக்க அறிஞர் அண்ணா அவர்கள் என்னுடைய 26ஆவது வயதிலே வாய்ப்பு வழங்கினார்கள். உனக்கு அந்த வாய்ப்பு 50வது வயதிலேதான் கிடைத்திருக்கிறது. இவ்வளவு தாமதமாக கிடைத்ததற்கு காரணம், எதுவும் அவசரமாக, விரைவாக கிடைப்பதைவிட, தாமதமாக கிடைத்தால் அதற்கு வலு அதிகம். அந்த வலு உனக்குச் சேர்ந்திருக்கிறது. அந்த வலுவை மேடையிலே வீற்றிருக்கின்ற நம்முடைய கழக முன்னணித் தலைவர்களும், எதிரே வீற்றிருக்கின்ற என்னுடைய உடன்பிறப்புக்களும் உனக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எதையும் ஜனநாயக ரீதியிலேதான் இந்தக் கழகம் சந்திக்கும். அதையும் நீ மறந்துவிட மாட்டாய்.

    காலையிலே பேராசிரியர் அவர்கள் பேசியதை கவனித்திருப்பாய் என்று கருதுகிறேன். அவர் இன்று மாத்திரமல்ல; இதற்கு முன்பு ஒருமுறை அவ்வாறு பேசினார். பேராசிரியர் எனக்கு ஒரு வயது மூத்தவர். என்னைப் பொறுத்தவரையில் அறிஞர் அண்ணா இல்லாத குறையை நீக்கிக் கொண்டிருப்பவர். அவர் காலையில் பேசும்போது, “அண்ணா மறைந்த பிறகு கலைஞர்தான் இந்தக் கழகத்தை நடத்திச் செல்வார் என்று எல்லோரும் முடிவெடுத்தபோது, நான் அதிலே கொஞ்சம் அபிப்பிராய பேதம் கொண்டேன். நான் நம்பிக்கை கொள்ளவில்லை. ஏனென்றால் கலைஞர் கொஞ்சம் கோபக்காரர், அவரால் இந்த இயக்கத்தை நடத்தமுடியுமா ? என்று சந்தேகப்பட்டதுண்டு. அப்படி சந்தேகப்பட்ட நான், அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்றால், அவரைத் தவிர இந்த