27
"உயர் தனிச் செம்மொழியாகிய தமிழ் என் தாய் மொழி என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது. நீண்ட வரலாற்றையும், புகழ் மிக்கப் பொற்காலங்களையும் உடைய மொழி - கவிஞர் யாத்த மொழி - கவிதைகள் கொஞ்சும் மொழி - கருத்தாலும், கவின் வளத்தாலும் கடலெனப் பரந்து கிடக்கும் மொழி எங்கள் உயிரோடு, வாழ்வோடு கலந்த மொழி - அந்தத் தமிழ் மொழி மற்றெதற்கும் தாழாத வகையில் ஆட்சி மொழி என்ற தகுதி தரப்படும் வரை நான் அமைதி பெறமாட்டேன்" என்று அண்ணா அங்கே பேசினார். ஒரு மொழி செம்மொழி ஆவதற்கும், மத்திய ஆட்சி மொழி ஆவதற்கும் என்னென்ன தகுதிகள் வேண்டுமோ அந்தத் தகுதிகளையெல்லாம் பெற்ற மொழி தான் நம்முடைய தமிழ் மொழி. 11 தகுதிப்பாடுகள் குறிக்கப்படுகிறது. அந்த 11 தகுதிப்பாடுகளுக்கும் தமிழ் மொழி பொருந்தும். உலகத்திலே உள்ள முக்கியமான மொழிகள் 600. அதிலே இலக்கிய இலக்கணம் உடைய மொழிகள் 300. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை உடைய மொழிகள் ஆறு. தமிழ், சீனம், சமஸ்கிருதம், லத்தீன், ஹிப்ரூ, கிரீக் ஆகிய இந்த ஆறும் தான் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுக்குரிய மொழிகள். இதில் லத்தீனும், ஹிப்ரூவும் செத்துப் போன மொழிகள். இஸ்ரேல் அரசாங்கம் ஹிப்ரூவுக்கு உயிரூட்டும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கின்றது. கிரீக் மொழி தற்போது புது வாழ்வு பெற்று வருகிறது. சமஸ்கிருதத்துக்கு என்றுமே பேச்சு வழக்கு இருந்ததில்லை. எழுத்து வழக்கு மட்டுமே. இந்திய மொழிகள் எதற்கும் இல்லாத தனிச் சிறப்பு அது தான் பன்னாட்டு மொழி தமிழ், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய இரு தமிழ் மொழிக்கு உண்டு. என்ற தகுதி.