உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

உடனடியாகக் கூட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். கூட்டுகிறேன், எல்லா முதல் அமைச்சர்களும் வரவேண்டுமே என்று ஆதங்கப்பட்டார். கூட்டுங்கள், வருவார்கள் என்றேன். ஆனால் அப்போது தமிழக முதல் அமைச்சர் சென்னையிலே இல்லை, ஊட்டியிலே இருந்தார்கள். நான் வாஜ்பய் அவர்களிடம் சொன்னேன் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன், மறு நாள் காவேரி ஆணையத்தைக் கூட்டுங்கள் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் அதை கேலி செய்யவில்லை, நான் சொன்னதால் தான் அவர் கடிதம் எழுதினார் என்றெல்லாம் சொல்லவில்லை. நல்லது நடந்தால், நம்முடைய விவசாயிகளுக்கு நன்மை கிடைக்குமேயானால், அவர்களுடைய வாட்டம் போக்கப்படுமேயானால் என்னைவிட மகிழ்ச்சி அடையக் கூடிய ஒருவன் தமிழ் நாட்டிலே இருக்க முடியாது. அடுத்த தீர்மானம்:- செம்மொழியாக அறிவிக்கப் படுவதற்கும், மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக இடம் பெறுவதற்கும் அனைத்து தகுதிகளும் தமிழ் மொழிக்கு இருந்தும், பலமுறை மத்திய அரசிடமும், நாடாளுமன்றத் திலும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டும், இதுவரை அதனையேற்று அறிவிக்காமல் இருக்கும் மத்திய அரசின் மெத்தனப் போக்கைச் சுட்டிக்காட்டுவதுடன் உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தியும்; பேரறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த போதே அங்கே பேசியிருக்கிறார்.