உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

9 உயர்நீதிமன்றம் சொல்கிறது. அதற்குப் பிறகாவது இந்த அரசுக்கு புத்தி வர வேண்டாமா ? இவர்களுடைய கேரக்டர், இவர்களுடைய குணாதிசயம் என்ன என்பதை நாடு புரிந்து கொள்ளட்டும். பழி வாங்குவது தான் இவர்களுக்கு வேலை. ஏறத்தாழ ஓராண்டுக்கு மேலாகிறது தம்பி வைகோவை கைது செய்து சிறையிலே அடைத்து. அவரோடு மேலும் ஏழெட்டு பேர் கைது. அதைப் போலவே ஒல்லிய உருவம், உடல் நலம் இல்லாதவர், பழ. நெடுமாறன். என்ன குற்றம் செய்தார்கள். எப்போதோ ஒரு நாள் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்பதை விட வேறென்ன செய்தார்கள். ஜெயலலிதா விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லையா? பொடா சட்டத்தை முன்கூட்டியே அமுலாக்குவதாக தெரிவித்து, பிரகடனம் செய்தால் அந்தச் சட்டப்படி முதலிலே கைது செய்யப்பட வேண்டியவர் ஜெயலலிதா அல்லவா? 1991ஆம் ஆண்டு இந்துப் பத்திரிகைக்கும், எக்ஸ்பிரஸ் ' பத்திரிகைக்கும் கொடுத்த தனிப் பேட்டியிலே ஜெயலலிதா என்ன சொல்லியிருக்கிறார். பிரபாகரனைப் போன் ற ஒரு மாவீரன் உலகத்திலே இல்லை என்று சொல்லவில்லையா? பிரபாகரனுக்கு இலங்கையிலே ஒரு தீங்கு ஏற்பட்டால் தமிழ்நாடு பற்றி எரியும் என்று ஜெயலலிதா சொல்லவில்லையா? பங்களா தேஷ் பிரச்சினையிலே இந்திரா காந்தி படையெடுத்துச் சென்றதைப் போல இப்போதும் படை எடுத்துச் சென்று தமிழீழத்தைப் பெற்றுத் தரவேண்டுமென்று பேட்டி கொடுக்கவில்லையா ஜெயலலிதா ? இவர்கள் இன்றைக்கு பொடா சட்டத்தைப் போட்டு மற்றவர்களை வாட்டுகிறார்கள்.