உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

அப்போதே சொன்னோம். இந்தச் சட்டத்தை மாநில அரசுகள் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்றோம். கேட்கவில்லை. நமக்கு உறுதியளித்தார்கள், அத்வானி அவர்களும், வாஜ்பய் அவர்களும். எங்கள் உறுதிமொழியை நம்பமாட்டீர்களா என்றார்கள். நம்பினோம், நம்பிக் கெட்டோம் அய்யா இன்றைக்கு என்று சொல்கிற அளவிற்கு நிலைமை ஆகியிருக்கின்றது. எனவே அரசியலில் பழி வாங்க அந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அடுத்து ஒரு பொருளாதார தீர்மானம் தொழிலாளர் களுக்காக! அரசுக்குச் சொந்தமான தொழில்களையும் அரசுச் சார்புடைய தொழில்களையும் தனியார் வசம் ஒப்படைப்பதையோ தனியாருக்கு விற்பனை செய்வதையோ மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தியும்; அரசாங்கத் தொழிற்சாலை, அரசு சார்புடைய தொழிற் சாலை ஆகியவற்றை தனியாருக்கு விற்பதால், ஒப்படைப்பதால் தொழிலாளர் நலம் பாதிக்கப்படுகிறது. தேசிய மயக் கொள்கைக்கு இழுக்கு ஏற்படுகிறது. புதிதாக ஆரம்பிக்கப்படுகின்ற தொழில்கள் வேண்டுமென்றால் தனியார் ஆரம்பிக்கட்டும், நாங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. தி.மு.க. அதற்கு எதிரியல்ல. ஏற்கனவே அரசு சார்புடைய தொழிற்சாலைகளை, நாளைக்கு திடீரென்று நெய்வேலி தொழிற்சாலையை எடுத்துக் கொண்டு போய், தொழிலாளர்களுக்கு ஆனால்