உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

33 மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது எப்படி தூண்டிவிடுவதாகும்? அவர்கள் என்ன கேட்டார்கள் ? தாங்கள் முன்பே பெற்று வந்த போனசை கேட்டார்கள். தொழிலாளி போனஸ் கேட்பது பெரிய பாவமா? தொழிலாளி அகவிலைப் படியைக் கொடு என்று கேட்பது பாவமா ? முடிந்தால் கொடுங்கள், இல்லையென்றால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள். தான். ஓய்வு பெறுகின்ற அரசு அலுவலர்களின் மாத சம்பளம் 3000 ரூபாய் என்றால், அவர் ஓய்வு பெறும்போது தி.மு.க. ஆட்சியில் கிடைத்த பணிக்கொடை ரூபாய் 2 லட்சத்து 3 ஆயிரத்து 462. ஜெயலலிதா ஆட்சியிலே அந்தத் தொகை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 945 ரூபாய் அவர்களுக்கு இதிலே வருத்தம் இருக்காதா? கேட்க மாட்டார்களா ? மாதச் சம்பளம் 5000 வாங்கியவருக்கு தி.மு.க. ஆட்சியில் ஓய்வு பெறும்போது கிடைத்த பணிக்கொடை தொகை 3 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய். அ.தி.மு.க. ஆட்சியில் இப்போது இந்தத் தொகை 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் தான். அவர்களுக்கு இழப்பு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என்றால் கேட்க மாட்டார்களா ? கேட்டால், தி.மு.க. ஆட்சியிலே உயர்த்திக் கொடுத்து விட்டோம் என்று எங்கள் மீது வழக்கா ? வழக்கு போடட்டும். நாங்கள் வழக்குகளுக்காகப் பயப்படுபவர்கள் அல்ல. எத்தனை வழக்குகளைப் போட்டாலும் அவற்றைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். தி.மு.க. திடீரென்று இலவச மின்சாரம் ரத்து. ஆட்சியிலே கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எல்லாம் ரத்து. அதைப் பற்றிய தீர்மானம் வருமாறு: