உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் ஆக கியோரின் வயிற்றெரிச்சலைக் கிளப்புகின்ற அளவிற்கு இப்போது தி.மு.க. ஆட்சியில் கொடுக்கப்பட்டு, 13 ஆண்டு காலமாக அவர்கள் அனுபவித்து வந்த இலவச மின்சாரத் திட்டத்தையும் ரத்து செய்ய ஏற்பாடு செய்து, இப்போது ரத்து செய்யப்படுகின்ற சூழ்நிலை வந்துவிட்டது. இதை இந்த மாநாட்டில் இந்தத் தீர்மானத்தின் மூலமாகக் கண்டிப்பதோடு மீண்டும் இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகிறோம். அடுத்த தீர்மானம் - கௌரவ ரேஷன் கார்டு என்னும் பெயரால் 40 லட்சம் நடுத்தர மக்களை அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் பெற முடியாதபடி அவல நிலைக்கு ஆளாக்கியிருக்கும் அ.தி.மு.க. அரசின் அநியாய ஆணையை ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியும்; நேற்றைக்கு தம்பி வெற்றி | கொண்டான் பேசும்போது, அது என்னப்பா கௌரவ ரேஷன் கார்டு! அதை வாங்கினால் தான் கௌரவமா? வாங்காவிட்டால் கௌரவம் இல்லையா? என்று வேடிக்கையாகக் கேட்டார். இது வேடிக்கையல்ல. வேதனையான விஷயம். 40 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு இல்லை. ரேஷன் கடைக்குச் சென்று எதுவும் வாங்க முடியாது. பிறகு எதற்காக அவர்களுக்கு ரேஷன் கார்டு ? அதை வாங்கியே தீர வேண்டும் என்று எதற்காக மிரட்டல் செய்ய வேண்டும் ? வணிகர்களைப் பொறுத்தவரையில் ஒரு தீர்மானம். வணிகர்களைப் பொறுத்தவரையில் தி.மு.கழக ஆட்சியில்