உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

ஏற்கனவே இருந்த பல முனை வரிகளையெல்லாம் ரத்து செய்துவிட்டு, ஒரு முனை வரியாக்கி வணிகப்பெருமக்கள் நம்மை வானளாவப் புகழ்ந்தார்கள். கொண்டாடினார்கள். தோளிலே தூக்கி வைத்துக் கொண்டார்கள். பிறகு தேர்தல் வந்தது. திடீரென்று இறக்கி விட்டு விட்டார்கள். என்ன வென்று கேட்டோம். நாங்கள் நடு நிலைமை, அதனால் நீங்கள் தோளிலும் இல்லை, காலிலும் இல்லை, இடுப்பில் தான் இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். என்ன ஆயிற்று? இந்த ஆட்சி வந்தவுடன் மீண்டும் பல முனை வரி. அது மாத்திர மல்ல. இந்த அதிகார வர்க்கத்தினரிடம் வணிகர்கள் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்களே, வணிகர்களுக்கு பெரும் வேதனை. இது பற்றிய தீர்மானம் 'ஒருமுனை வரிக்குப் பதிலாக வணிகர்களை வாட்டும் முனை வரியை விதித்துள்ள அ.தி.மு.க. அரசின் ஆணைகளை உடனடியாக ரத்து செய்யவேண்டுமென்று வலியுறுத்தியும்;' - பல “ அது இப்படி வரிகள் உயர்ந்த காரணத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துவிட்டன. நேற்றும் இன்றும் தாய்மார்கள் ஏராளமாக வந்திருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியும். தி.மு. கழக ஆட்சியில் 2001இல் துவரம்பருப்பு ஒரு கிலோ 27 ரூபாய். ஜெயலலிதா ஆட்சியில் இப்போது விலை குறைந்துவிட்டது. அதாவது ஒரு கிலோ 34 ரூபாய். நல்லெண்ணெய் தி.மு.க. ஆட்சியிலே 45 ரூபாய். இன்றைக்கு 75 ரூபாய். கடலெண்ணெய் தி.மு.க. ஆட்சியிலே ரூபாய். ஜெயலலிதா ஆட்சியிலே 56 ரூபாய். தேங்காய் எண்ணெய் தி.மு.க. ஆட்சியில் 48 ரூபாய். இன்றைக்கு மிகவும் குறைந்துவிட்டது, 85 ரூபாய். பாமாயில் தி.மு.க. ஆட்சியிலே 21 ரூபாய்.