உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

அந்தச் சட்டம் வந்தாலும் தி.மு.கழக உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் சரி, சட்ட மன்றத்திலும் சரி, பொதுவாகவும் சரி, கட்சி ரீதியாகவும் சரி அதை எதிர்த்தே தீருவோம் என்பதை இன்றல்ல, அன்றைக்கே சிங்கண்ணச் செட்டித் தெருவிலே சென்னையிலே நடைபெற்ற கூட்டத்தில் நானும் பேராசிரியரும் பேசிக் கண்டித்திருக்கிறோம். பாபர் மசூதியை இடிக்கக் கூடாது, கர சேவை கூடாது என்று. மீண்டும் ஒரு முறை அது இடிக்கப்பட்ட மறுநாள், அதே சிந்தாதிரிப் பேட்டையில் கூட்டம் நடத்தி அதைக் கண்டித்திருக்கிறோம். அந்த உணர்விலிருந்து என்றைக்கும் மாற மாட்டோம் என்பதைத் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். நாங்கள் தெரிவித்து இந்தப் அடுத்த தீர்மானம் - ஆடு, மாடு, கோழி போன்ற பிராணிகளை உண்பதற்கு பயன்படுத்தலாம் எனும் நிலை இருக்கும் போது அவற்றை நேர்த்திக்கடனுக்கு பயன்படுத்தக் கூடாது என்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் தொன்மையான கலாச் சாரத்தின் மீது படையெடுப்பு நடத்தி இம்மக்களுக்கு தொடர்பில்லாத ஆகமக் கலாச்சாரத்தை நிறுவ முயற்சிக்கும் ஜெயலலிதா அரசின் முயற்சியினை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தகைய அறிவிப்புகளையும் தடை நடவடி க்கைகளை விலக்கிக்கொள்ள வலியுறுத்தியும்; ஆடு, மாடு, கோழி தின்காமலா இருக்கிறோம் ? பிரியாணி சாப்பிடாமலா இருக்கிறோம். சாப்பிடுகிறவன் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும்