உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

சிறைச் சாலைகளை நிரப்பும் மறியல் போராட்டத்தை நடத்துவதென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த மாநாடு தீர்மானிக்கின்றது. இந்தப் போராட்டத்திற்கு முன்பு இடைக் காலத்தில் அக்டோபர், நவம்பர் ஆகிய இரு மாதங்களில் போராட்ட விளக்கக் கூட்டங்களை நடத்தி அந்தக் கூட்டங்களில் இந்த மாநாட்டின் தீர்மானங்களை மக்களுக்கு விளக்கி மக்கள் சக்தியைத் திரட்டுவது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது. தொடர் நடவடிக்கைகளை நானும் பொதுச் செயலாளரும் கலந்து பேசி விவாதித்து அவைகளை யெல்லாம் நிறைவேற்றி, இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு நீங்கள் அத்தனை பேரும் ஒத்துழைக்க வேண்டும். போராட்டம் எப்போது, எப்போது என்று கேட்டீர்கள். எப்போது என்று சொல்லிவிட்டேன். அப்போது நீங்கள் வர வேண்டுமென்று உங்களையெல்லாம் அழைத்து இந்த மாநாட்டை சிறப்புற நடத்திய தம்பி பொன்முடியை மீண்டும் மீண்டும் வாழ்த்தி, பாராட்டி விடைபெறுகிறேன். இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் பேருரையாற்றினார்.