4
6 மாதமோ சிறைச்சாலைக்குச் சென்றவர் என்று சொல்லி, இவரை விழுப்புரத்திலே நிறுத்தினால் வெற்றி நிச்சயம்" என்றார்கள். பெயர் என்ன என்று கேட்டேன். தெய்வசிகாமணி என்றார்கள். தெய்வசிகாமணியாக திராவிட முன்னேற்றக் கழகத்திலே நுழைந்தவர், பொன்முடியாக புனைபெயர் கொண்டு உழைத்தவர், இந்த மாநாட்டை இவ்வளவு வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் இன்றுதான் பொன்முடி என்ற பெயருக்கு பொருத்தமானவர் என்று ஆகியிருக்கிறார். மாநாட்டுச் செயலாளர்களாக எஸ்.எஸ்.பன்னீர் செல்வம், உதயசூரியன், இராதாமணி, துணைச் செயலாளர்களாக நடராசன், மூக்கப்பன், சேதுநாதன், அழகுவேலு, பஞ்சாட்சரம், பச்சையப்பன், நிதிக்குழுத் தலைவராக ஆதிசங்கர் எம்.பி., - அவர் நிதிக்குழுத் தலைவர் மாத்திரமல்ல; அவர் இந்த மாநாட்டுப் பந்தலிலும், அணிவகுப்பிலும் ஆடி ஓடியதையெல்லாம் பார்த்தபோது, நிதிக்குழு தொண்டராக பணியாற்றுகிறாரோ என்று கருதினேன். செயலாளராக மணிக்கண்ணன், துணைச் செயலாளர்களாக திருக்காமு, பெருமாள், சதா. மகாலிங்கம், கண்ணன், குமுதம் அம்மாள், பந்தல் குழுத் தலைவராக விஜயகுமார், செயலாளராக நந்தகோபால், மேடைக்குழுத் தலைவராக என்னுடைய நல்லுபசாரத்திலே நன்கு பழக்கப்பட்ட தம்பி ஏ.ஜி.சம்பத், செயலாளர்களாக பொன்.இராதாகிருஷ்ணன், துரை. பெரியசாமி, உபசரிப்புக் குழுத் தலைவராக ஆர்.ஜனகராஜ், செயலாளர்களாக புதுவை சிவக்குமார், புதுவை சிவா, கே.வி.சிட்டிபாபு, தீர்மானக்குழுத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர்