உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

டி.ஜி.வெங்கட்ராமன், செயலாளராக க.வேங்கடபதி, அணிவகுப்புக் குழுவின் தலைவராக புஷ்பராஜ், செயலாளர்களாக வசந்தவேல், அன்னியூர் ஏ.சிவா, டி.என்.ஜே.சம்பத், தங்க ஆனந்தன், டி.கே.கிருஷ்ணன், விளம்பரக் குழுத் தலைவராக கே.எஸ்.மஸ்தான் (அவரது உருவத்தைப் போலவே பல பதாகைகள் விழுப்புரம் முழுவதும் நிறைந்திருப்பதை நான் கண்டேன்) செயலாளர்களாக டி.ஆர்.ரவி, வளவனூர் வைத்தியலிங்கம், வானூர் சங்கர், மாநாட்டு மலர்க் குழுத் தலைவராக புலவர் கண்ணப்பன், செயலாளராக புலவர் சீத்தா, தொண்டரணித் தலைவராக கோ.பார்த்தீபன் தொண்டரணித் தலைவர் என்றதும் கைதட்டுகிறீர்கள் மகிழ்ச்சி. தொண்டரணித் துணைத் தலைவர்களாக ரவிதுரை, இளமதி, ராஜாத்தி, எஸ்.எஸ்.கணேசன், பிர்லா செல்வம், செழியன் இப்படி மாநாட்டு அலுவலகப் பொறுப்பு, நகர அலங்காரக் குழு, மகளிர் தொண்டர் அணி, மகளிர் குழு இவைகளையெல்லாம் மிகச் சிறப்பாக நடத்திய கழகத்தினுடைய உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை, வாழ்த்துக்களை, பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாடு போல, இனிமேல் யாரும் ஒரு மாநாடு நடத்த முடியாது என்று சொன்னதிலே என்னுடைய தம்பி வீரபாண்டி ஆறுமுகத்திற்கு கோபம். ஏன் என்றால் அவர் மாநாடு நடத்தப் போகிறார். இதைவிட ஒரு சிறப்பான மாநாடு நடத்தக்கூடிய ஆற்றல் பெற்றவர் அவர். நடத்திக் காட்டியவர் அவர். இப்படி ஒரு போட்டி தி.மு.கழகத்திலே மாநாடு நடத்துவதிலே, தேர்தல் நிதி திரட்டுவதிலே ஏற்பட்டால், அதிலே கிடைக்கும் இலாபமெல்லாம் எனக்குத்தான். எனக்குத்தான் என்றால் தலைமைக் கழகத்திற்குத்தான். ல