பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 79 ஆல்பாக்கதிர், பீட்டாக்கதிர்: வேற்றுமை : ஆல்பாக் கதிர்களைவிட பீட்டாத் துகள்கள் மிக நீண்ட வீச்கினைப் (Range) பெற்றுள்ளன. பீட்டாத் துகள்கள் அதிக ஆற்றலைப் பெற்றுள்ளன என்பது இதற்கு விளக்கம் அன்று; ஆளுல், அவை முக்கியமாகக் குறைந்த மின்னூட்டத்தையும் அதிகமான நேர்வேகத்தையும் பெற்றிருப்பதால், அவை மிகக் குறைந்த அளவுதான் அயனியாதலை உண்டாக்குதல் கூடும்; ஆதலால் அவை தம்முட்ைய பாதையில் ஆற்றலை மிக மெதுவாகவே இழக்கின்றன. ஆளுல், ஆல்பாக் கதிர்களுக்கும் பீட்டாக் கதிர்களுக்கும் மிகவும் சிறப்பியல்பான இன்னொரு வேற்றுமையும் உண்டு. ஓர் ஒருபடித்தான கதிரியக்கப் பொருளின் எல்லா ஆல்பாக் கதிர்களும் சரியாக ஒரே வீச்சினையே பெற்றுள்ளன; ஆதலால் அவற்றின் ஆற்றலும் ஒரே அளவுதான் இருக்கும். எதிர்ப் பார்க்கவேண்டியதும் இதுதான்; ஏனெனில், ஏதாவது ஒரு வேதியியல் செய்கையில் வெளிப்படும் ஆற்றல் அந்த அமைப் பின் தொடக்க, இறுதி நிலைகளிலிருந்து தீர்மானிக்கப்பெறு வது போலவே, கதிரியக்கச் சிதைந்தழிதலால் வெளிப்படும் ஆற்றலும்-அஃதாவது, சிறப்பாக ஆல்பாத்துகளின் ஆற்றல் -அணுக்கருவின் தொடக்க, இறுதி நிலைகளைப் பொறுத்துள் ளது. பொதுவாகக் கூறுமிடத்து, ஒரே வகையைச் சேர்ந்த எல்லா உட்கருக்களும் ஒரே அளவு ஆற்றலேத்தான் கொண் டுள்ளன; ஆனால், பீட்டாக் கதிர்களைப் பெர்றுத்தமட்டிலும் இந்நிலை ஆல்பாக் கதிர்களின் நிலையினின்றும் வேறு விதமாக உள்ளது. எந்த ஒருபடித்தான கதிரியக்கப் பொருளும் மிக அதிகமான நேர்வேக எல்லையிலிருந்து மிகக் குறைந்த நேர் வேக எல்லை வரையிலும் உள்ள எல்லாவித நேர்வேகங்களைக் கொண்ட பீட்டாக் கதிர்களை வெளிவிடும். இந்த மேலெல்லை யுடன் ஒத்துள்ள ஆற்றல் அணுவின் தொடக்க, இறுதி நிலை களிலுள்ள ஆற்றல்களின் வேற்றுமையுடன் முற்றிலும் ஒத் துள்ளதாகக் காணப்படுகின்றது. தனிப்பட்ட பீட்டாத் துகள்களினின்று குறையும் ஆற்றலே (Energy missing) ஏதா