பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் I so I லாம். மேலும், வேறு இரண்டு ஹீலிய அணுக்கருக்கள் உள் ளன; அவை இரண்டும் நிலைத்தவை அன்று. அவை முறையே 3 நியூட்ரான்களையும் 4 நியூட்ரான்களையும் கொண்டவை. ஆகவே, அவை He" என்ற குறியீட்டாலும், He" என்ற குறியீட்டாலும் எழுதிக் காட்டப்பெறுகின்றன. அவை జీవిత இயற்கை ஹீலியத்துடன் காணப்பெறுவ H%). எளிதான குறியீட்டு அமைப்பு: மேலும், புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் தொடர்ந்து சேர்த்துக்கொண்டே போனல், மிகவும் சிக்க லான அமைப்பைக் கொண்ட அணுக்கருக்களை அடைகின் ருேம். இன்று நிலைபெற்றுள்ள எல்லா அணுக்கருக்களையும் கொண்டு ஒரு கருத்துப்படம் (Chart) உண்டாக்கலாம். அவற்றின் அணு-எண்களை-அஃதாவது, அவற்றின் புரோட் டான்களின் எண்ணிக்கையை-2 என்ற குறியீட்டால் குறித்து மட்டாயத்திலும் (Abscissa), நியூட்ரான்களை N என்ற குறியீட்டால் குறித்து குத்தாயத்திலும் (Ordinate) பதிவு செய்யலாம். எனினும், வேருெரு முறையைக் கை யாண்டால் அச்சிடுவோருக்கு மிகவும் வசதியாக இருக்கும்: இம்முறையில் மட்டாயத்தில் z என்பது புரோட்டான்களின் எண்ணிக்கைகளையும், குத்தாயத்தில் N-2 என்பது புரோட் டான்களின் எண்ணிக்கைக்கு மேல் அதிகமாக உள்ள நியூட் ரான்களின் எண்ணிக்கைகளையும் குறிக்கின்றன. இம்முறை தான் அட்டவணை-IV (a) யிலும் அட்டவணை-IV (b) யிலும் (நூலின் இறுதியில் காண்க) மேற்கொள்ளப்பெற்றுள்ளது. தனிப்பட்ட தனிமங்களின் ஒழுங்கு ஆவர்த்த அமைப்பின் (Periodic System) ஒழுங்குடன் ஒத்து வருகின்றது, அட்ட வணைகளில், அணுக்கருக்கள் அவற்றின் நிலைத்த தன்மை யாலோ, அன்றி கதிரியக்கச் சிறப்பியல்புகளாலோ வேறு படுத்தி அறியப்பெறுகின்றன. நிலைத்த தன்மையுள்ள அணுக்கருக்கள் கறுப்புநிறப் புள்ளிகளால் குறிப்பிடப்பெற் றுள்ளன. அவற்றுள் ஒன்று He" என்ற அணுக்கரு, Z- 2