பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் i 2 5 வது, ஹீலிய அணுக்கருவின் பருமனளவைப் போல் யுரேனிய அணுக்கருவின் பருமனளவு 64 மடங்கு உள்ளது. ஆயினும், யுரேனிய அணுக்கரு ஹீலிய அணுக்கருவிலுள்ள துகள்களைப் போல் கிட்டத்தட்ட அறுபது மடங்கு துகள்களைத்தான் கொண்டுள்ளது. அணுக்கருவின் செறிவு: இந்த இரண்டு மெய்ம்மைகளும்-அஃதாவது தனித் தனித் துகள்களின் சிட்டத்தட்ட சமமான பிணைப்பாற்றல் களும், அணுக்கருவின் பருமனளவிற்கேற்றவாறு துகள்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சரியான விகிதத்திலிருப்பதும்வேருெரு முடிவினை மெய்ப்பிக்கின்றன. அஃதாவது, அணுக் கரு முழுவதிலும் புரோட்டான்களும் நியூட்ரான்களும் ஏறக் குறைய ஒரே மாதிரியாகக் கலந்துள்ளன என்பதுதான்; ஏனெனில், அவை அவ்வாறின்றேல், தனிப்பட்ட அணுக்கரு வின் பகுதிகளிலும் வெவ்வேறு அணுக்கருக்களின் வகை களிலும் காணப்பெறும் பிணைப்பாற்றல்களில் அதிக வேற் றுமை காணப்பெறும். மேலும், இந்த மெய்ம்மை, பரும எளவிற்கேற்றவாறு துகள்களின் எண்ணிக்கை உள்ளது என்ற மெய்ம்மையுடன் சேர்ந்து, மிக இலேசாகவுள்ள அணுக்களைத் தவிர ஏனைய அணுக்களிலெல்லாம் உட்கருவின் செறிவு வினி யோகம்ஒரேமாதிரியாகவுள்ளது என்பதை உணர்த்துகின்றது. எனவே, எல்லா அணுக்கருக்களிலும் ஒருபடித்தான உட்கருப் Gurdjoir (Homogeneous nuclear substance) 31–fisãujairargo என்று கூற இடத்தருகின்றது: அஃதாவது, எல்லா அணுக் கருக்களிலும் புரோட்டான்களும் நியூட்ரான்களும் சேர்ந்த கலவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான செறிவுடன் அடைக் கப்பெற்றுள்ளது என்று சொல்லலாம். ஆனால், வெவ்வேறு இன அணுக்களில் நியூட்ரான்களுக்கும் புரோட்டான்களுக்கு முள்ள விகிதத்தில் மிகச் சிறிய அளவில் வேற்றுமை உள்ளது.