பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 அணுக்கரு பெளதிகம் குறிப்பிட்ட வீச்சின் காரணமாக, மிகக் குறைந்த தூரத் தைத்தவிர மற்ற எந்தத் தூரத்திற்கும் நிலையாற்றல் நடை முறையில் 0-மாக உள்ளது. படம்-15. தூரம் r-இன் சார் பலளுகக் கொண்ட நிலையாற்றலின் கிட்டத்தட்ட சரியான வளைவரையைக் காட்டுகின்றது. இந்த ஆற்றல் உயர்ந்த எதிர் அளவுகளிலிருந்து O-யத்தின் பக்கத்தை அடையும் வரையில் மிக விரைவாக அதிகரிக்கின்றது; அதன்பிறகு அஃது அஸிம்டோட்டாகப் போகின்றது. குறைந்த தூரங் களைக் கூறுங்கால், ட்யூடெரானின் பொருண்மைக் குறைவிலி GË E Éžavuri på svårausog (Potential energy curve) நேரல் முறையில் (Indirectly) கணக்கிடப் பெறலாம். அதன் நிலையாற்றலுடன், அந்த அமைப்பு ஒர் இயக்க ஆற்றலையும் பெற்றுள்ளது. காரணம், புரோட்டானும் நியூட்ரானும் தொடர்ந்தாற்போல் இயக்க ஆற்றல் நிலையாற்றலாகவும், நிலையாற்றல் இயக்க ஆற்றலாகவும் மாற்றம் அடைந்து கொண்டு ஒன்ருேடொன்று பரிமாற்ற முறையில் அதிர்ந்து கொண்டே உள்ளன. இந்த ஆற்றல்களின் கூட்டுத்தொகை எப்பொழுதும் அதன் பிணைப்பாற்றல் 2.2 Mew க்குச் சம மாகவே இருக்கும்:இஃது படம் 15-இல் இது ஒரு கிடைக்கோ டாகக் (Horizontal line) காட்டப்பெற்றுள்ளது. எடுத் துக்காட்டாக, ட்யூடெரானின் குறுக்கள விலிருந்து உறுதிப் பாடின்மை விதியையொட்டி (Uncertainity principle), இயக்க ஆற்றலின் சராசரிஅளவு மதிப்பிடப்பெறலாம். ஒருகுறுத்கள வினைக் கொண்ட சரியான இடத்திலுள்ள் இப்பொருளைப் பற்றியதிருத்தமான நம் அறிவு அதன் நேர்வேகத்தைப்பற்றிய ஒரளவு விகிதசமமாகவுள்ள நம்முடைய திருத்தமற்று அறிவு டன் கைகோத்துச் செல்லுகின்றது. அதன் பாதிப் பொருண் மையை நேர்வேக மடக்கெண்ணல் பெருக்க, அதன் சராசரி 2. Asymtotically-sissing ro, ra. "ஒரு வளைவரையை அணுகுவதும், ஆளுல் ஒரு முடிவுடைய தூரற்திற்குள் (Finite distance) அதை அடையாததுமான நிலையிலுள்ள கோடு 'அவிம்டோட்டாகப் போகிறது' என்று சொல்லப்படும்.