பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 197 களால் பகிர்ந்து கொள்ளப்பெறுகின்றது. ஆகவே, மிகமிக வேகமாகச் செல்லும் பீட்டாத்துகளின் ஆற்றல் சிதைந்தழி யும் ஆற்றலை உறுதிப்படுத்தக்கூடியதாகவுள்ளது; இது பீட் டாத் துகளின் நியூட்ரினே சிதைந்தழியும் ஆற்றலில் சிறிதும் பகிர்ந்து கொள்வதில்லை. மின்-அலைக் கொள்கையின் துணை: இனி, மின்.அலேக் கொள்கையின் துணையைக்கொண்டு ஆற்றலுக்கும் சிதைந்தழிதல் ஏற்படு நிலைக்கும் உள்ள உறவு முறையினை நாம் அறிந்து கொள்வோம். ஏனெனில், ஒரு பீட்டாக் கதிர்வீசல் அணுக்கருவின் புறத்தமைப்பிலிருந்து வெளிடப்பெறும் ஒளியுடன் உண்மையில் ஒப்பிடப் பெறுதல் வேண்டும். இப்பொழுது நாம் அலைக்கூறு மொழியில் சிந்தனை செய்து கொண்டுள்ளோம். ஆகவே, நாம் அணுக் கருவிலிருந்து நியூட்ரினேவுடன் வெளிவரும் எலக்ட்ரான் அல்லது பாசிட்ரான் அலை என்று பேசுகின்ருேம். இந்த அலையை நாம் வானெலியின் வான்கம்பியிலிருந்து (Aerial) வெளியிடப் பெறும் மின் அலையுடன் ஒப்பிடுவோம். பிளாங்க் விதியின் பிரயோகம்: E = h என்ற பிளாங்கின் விதி இந்தச் சடப் பொருள் அலைகளுக்கும் பொருந்துகின்றது.அவ்விதி E என்றஅலைகளின் ஆற்றலையும் என்ற அவற்றின் அதிர்வு-எண்ணையும் இணைக் கின்றது. இதில் E என்பது பீட்டாத் துகள்களின் ஆற்றல் ஆகும்; இன்னும் சற்றுச் சரியாகக் கூறிஞல், அஃது எலக்ட் ராணின் பங்கிற்கு வரும் சிதைந்தழிதல் ஆற்றலின் பகுதி யாகும். சிதைந்தழிதல் ஏற்படுநிலை ஆற்றலைப்போல அதி கரித்தால், p-இன் அளவு எவ்வளவுக்கெவ்வளவு பெரியதாக இருக்கின்றதோ அவ்வளவுக்கல்வளவு சிதைந்தழில் ஏற்படு நிலையும் அதிகமாக இருக்கும். ஆகவே, கதிர்வீசலின் அல் நீளமும் அதற்கேற்றவாறு குறுகியதாக இருக்கும். அதிர்த்து