பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ü 3 அணுக்கரு பெளதிகம் அளவிற்கு விகித சமமாகவுள்ளது. இந்த எறிபொருள்' (Projectile) அணுக்கருவிற்கு எதிராகப் பறந்துவரும்பொழுது அதன் வேகம் தணிதல்கூடும்; பெரும்பாலானவற்றில்சிறப்பாக, பளுவான அணுக்கருக்களில்-அணுக்கருவிற்குச் சிறிது தொலைவில் இருக்கும்பொழுதே அஃது அமைதி நிலையை அடைந்துவிடும்; அல்லது அதன் பாதையினின்றும் ஒதுக்கப்பெற்று விடும்; இதனுல் அஃது எப்பொழுதுமே அணுக்கருவினைத் தாக்குவதில்லை. ஆகவே, உண்மையில், ஒரு மிகப் பளுவான அணுக்கருவினைத் தாக்குவதற்கு மின் னுரட்டம் பெற்ற துகள் மிக உயர்ந்த வோல்ட்டு அளவை களால் வேகமாக முடுக்கப்பெறுதல் வேண்டும்; இதற்கெனத் திட்டமிட்டுச் செய்யப்பெற்ற ஆய்கருவியினுல் இதனை உண் டாக்கி விடலாம், இக்காரணத்தினுல் மின்னூட்டம்பெற்ற துகள்களினல் மிக இலேசான அணுக்களில் மட்டிலும் அணுக் கரு உருமாற்றம் முறையாகச் சாத்தியப்படுகின்றது. அதற்கு மாருக, மின்னுாட்டம் பெற்றிராத துகள்களுக்கு ‘மின் அழுத்த அரண் என்பது ஒன்றில்லை; ஆகவே, அணுக் களை எந்தப் பொருண்மை - எண்ணுக்கு வேண்டுமானலும் உருமாற்றுவதற்கு அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடும். ஃபோட்டான்களால், அஃதாவது காமாக்கதிர் களால், பளுவான அணுக்கருக்கள் உருமாற்றங்கள் அடை வதைப் போதே' என்பாரும், அவருடன் சேர்ந்து ஆராய்ந்த அறிஞர்களும் அறிந்தனர்; நியூட்ரான்களால் நேரிடும் உரு மாற்றத்தைப் ஃபெர்மி" என்பார் முதன்முதலாகச் செய்து காட்டினர். ஆயினும், பெரும்பான்மையானவற்றில் நியூட் ரான் அணுக்கருவினுள் ஒன்று சேர்ந்து விடுகின்றது; மிகுதிப் படியாகவுள்ள ஆற்றல், ஒன்று அல்லது பல காமாக்கதிர் களால் வெளிக்கொண்டு செல்லப்பெறுகின்றது. இந்த இயக்கம் அணுக்கருவில் ஒரு மாற்றத்தைக் குறிப் பிட்டாலும், அஃது அணுவின் வேதியியற் பண்புகளில் எந்த 14. GurrĠ45 - Bothe. 15. 83Ge. iffus) - Fermi.