பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 l 6 அணுக்கரு பெளதிகம் அணுக்கரு மாற்றம்பற்றிய பொதுப்படை அறிவு: இவ்வாறு நாம் பொதுவாகப் பருந்து நோக்கில் (Bird's eye view) அணுக்கரு உருமாற்றங்களின் வெவ்வேறு சாத்திய மானவைகளைப்பற்றி அறிந்து கொண்டுள்ளோம். எல்லா அணுக்கருக்களேயும் உருமாற்றம் அடையச் செய்வதற்கு நியூட்ரான்கள் பயன்படுத்தப்பெறக்கூடும்; இலேசான அணுக்கரு இனங்களில் உருமாற்றத்தை விளைவிப்பதற்கு மின் னுாட்டம் பெற்ற துகள்கள் மிகவும் ப்ொருத்தமானவை. மின்னூட்டம் பெற்ற துகள்களில் முதல் நிலையில் ஆராய்ச் சிக்கு எடுத்துக்கொள்ளப்பெறுபவை புரோட்டான்களும், பட்யூடெரான்களும், ஆல்பாத் துகள்களும் ஆகும்; முன்னவை இரண்டும் மின்புலங்களில் தேவையான அளவுக்கு வேகம் வளர்க்கக் கூடியவைகளாக உள்ளன; மூன்ருவதாகக் குறிப் பிட்டவை மின்புலங்களில் ஹீலிய அணுக்கருக்களைத் தீவிர மாக வேகம் வளரச் செய்து இயற்கையாகவும் செயற்கை யாகவும் உண்டாக்கப்பெறுகின்றன. இறுதியாக, பல்வேறு அணுக்கருக்கள் மிக உயர்ந்த சுழி அளவுக்குத் தேவையான அளவு ஆற்றல் மிக்க காமாக் கதிர் ஃபோட்டானல் சூடாக்கப் பெற்று ஒரு நியூட்ரானை வெளிவிடச் செய்யப்பெறுகின்றன: இந்த நியூட்ரான் வெளி வருதலால், அவற்றின் பொருண்மை மட்டிலும் மாறுகின்றதே யன்றி, அந்தக் குறிப்பிட்ட அணு வின் வேதியியற் பண்புகள் மாறுவதில்லை. முடிவாக, அணுக்கரு பெளதிக முன்னேற்றத்தால் சிறப் பாக முக்கிய பங்கினைக் கொண்ட ஒரு சில எடுத்துக்காட்டுக் களே ஆராய்வோம். இவற்றை நாம் கால வரையறை ஒழுங் &ép (Chronological order) stgā ājā Qasrail Gaustib. நைட்ரஜன் ஆக்ஸிஜனுக மாறுதல்: 1919-இல் ரதர்ஃபோர்டு என்பார் ஆல்பாத் துகள்களைக் கொண்டு நைட்ரஜன் அணுக்களைத் தாக்கி அவற்றை ஆக்ஸி ஜன் அணுக்களாக மாற்றி முதன் முதலாக செயற்கை முறை அணுக்கரு உருமாற்றத்தை முற்றுப்பெறச் செய்தார். ஒரு