பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... £5.5 இறுதி வாய்பாட்டின அடிப்படையில் இந்த முழுச் செய லின் நிகர ஆற்றலை அறுதியிடக் கூடும். இத்தகைய செயலில் விடுவிக்கப்பெறும் ஆற்றலின் அளவு 25.5 Mey; இதையே மோல்களுக்குக் கணக்கிட்டு கிலோ கலோரிகளாக மாற்றி ஞல், அது மோல் ஒன்றுக்கு 600,000,000 கலோரிகளாகின் றது. மேற்கூறப்பெற்ற செயலில் உள்ளதற்கு இஃது ஆறு மடங்காகின்றது. கதிரவனிடமும் விண்மீன்களிடமும் நடைபெறும் செயல்களின் விளக்கம்: இங்கு நடைபெறுவதைக்கொண்டு கதிரவனிடமும் விண்மீன்களிடமும் நடைபெறும் செயல்களை இவ்வாறு விளக்கலாம்: விண்மீன்களின் அகட்டில், அணுக்கரு எரித லால் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப்பெறுகின்றது: இந்தச் செயலால் தொடர்ந்து ஏராளமான ஆற்றல் வெளி யாகின்றது. இந்த ஆற்றலைத்தான் கதிரவனும் விண்மீன் களும் கதிர்களாக வீசுகின்றன. சில சமயம் நாம் வேடிக்கை யாக கதிரவன் நிலக்கரியால் வெப்பமாக்கப் பெறுகின்றன்" என்று சொல்லுவதுண்டு. ஆனால், இது முற்றிலும் சரியல்ல. இங்கு நிலக்கரி-அஃதாவது, கரி-ஊக்கியாகப் (Catalyst) பங்கு பெறுகின்றதேயன்றி இயக்கத்தில் அது விழுங்கப்பெறு வதில்லை. தேவையான அளவு பொருள்களில் அணுக்கரு இயக் கங்கள் நடைபெறக் கூடுமானல், அவற்றிலிருந்து விடுவிக்கப் பெறும் ஆற்றல் ஏராளமாக உள்ளது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு போதுமானது. ஆயினும், நாம் ஒன்றன அதிகமாகக் கூறலாம். வயது குறைவாகவுள்ள விண்மீன் களிலிருப்பதைவிட வயது முதிர்ந்த விண்மீன்களில் ஹைட் ரஜன் குறைவாக உள்ளது என்று நம்புவதற்கு நல்லதொரு காரணம் உண்டு. இதனால் ஹைட்ரஜன் படிப்படியாகச்செல விடப்பெறுகின்றது என்ற குறிப்பு புலகிைன்றது.