பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 அணுக்கரு பெளதிகம் ஐயத்திற்கு ஒரு விளக்கம்: நம்மிடம் கிட்டதட்ட பெரிலியம் கலந்த 100 கிராம் ரேடியம் இருப்பதாகக் கொள்வோம். நியூட்ரான்களைத் தருவதற்கு இது மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒரு சில: பொருள். இத்தகைய மூலம் ஒன்று நம்மிடத்திலிருந்தாலும், யுரேனியப் பிளவு கண்டுபிடிக்கப்பெறுவதற்கு முன்பு நம் மால் ஏன் ஆய்வகத்தில் மேற்குறிப்பிட்ட அளவு ஆற்றலை உண்டாக்க முடியவில்லை? சாதாரணமாக ஆய்வகங்களில் கிடைக்கக்கூடிய மூலங்களுடன் ஒப்பிட்டால் இஃது உண்மை யில் ஏராளமான அளவுள்ளது. இந்தக் கதிர்வீசல் மூலத்தைக் கொண்டு ஒரு நாள் முழுவதும் சோற்றுப்பைக் (common sall) கதிரியக்கம் பெறச் செய்தால் 20,000 மில்லியன் குளோரின் அணுக்கள் கதிரியக்கக் கந்தக அணுக்க ளாக மாற்றப்பெறும். இது மிகவும் பெரியதொரு எண்ணே; இங்ங்ணம் உண்டாக்கப்பெறும் கந்தகமும் மிகத் தீவிரமான கதிரியக்கத்தைப் பெற்றிருக்கும். ஆல்ை, இவ்வாறு உண் டாகும் கந்தகத்தின் அளவு மிகமிகக் குறைவானது. இதன் அளவு கிட்டத்தட்ட ஒரு மில்லி கிராமின் ஒரு மில்லியனில் ஆயிரத்தில் ஒரு பகுதியாகும் அதிலிருந்து கிடைக்கும் ஆற்ற வின் அளவும் அதற்கேற்றவாறு மிகச் சிறிய அளவாகவே இருக்கும். அஃது ஒரு கிலோ கலோரியில் ஆறு மில்லியனில் ஒரு பங்குதான்! ஆயினும், இன்று இயங்கி வரும் மிகப் பெரிய சைக் ளோட்ரானேக்கொண்டு நியூட்ரானின் உறைப்பை நாம் வழக்கமாகக் கருதும் மேலெல்லையைவிடக் கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகரிக்கச் செய்யக்கூடும். இந்த உறைப்பு பெரிலியத்துடன் கலந்த 100 கிராம் அளவுள்ள ரேடியத் தைக் கொண்ட நியூட்ரானின் மூலத்திற்குக் கிட்டத்தட்டச் சமமாகின்றது. இதில் பொருளின் அளவும் ஆற்றலின் அள வும் கிட்டத்தட்ட 1000-மடங்காக உள்ளன; அப்படி இருந் தும், அவை மிக மிகச் சிறியனவாகவே உளளன. ஆயினும்,